மும்பை:மும்பை தாக்குதல் வழக்கில் குற்றவாளியாக கூறப்படும் கசாப்புக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மும்பை தாக்குல் வழக்கை விசாரித்து வந்த தனி கோர்ட், மே3ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் கசாப் உள்ளிட்ட 20 பேரை குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்தது.
இந்தியர்களான பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் மீது போலீசார் வழக்கை ஜோடித்திருந்ததின் காரணமாக அவர்களை விடுதலைச் செய்திருந்தது நீதிமன்றம்.
கசாப்புக்கான தண்டனை குறித்து மே 4ம்தேதி அரசு வக்கீல் உஜ்வால் நிகாம் மற்றும் கசாப் வக்கீல் பவார் ஆகியோர் வாதிட்டனர். உஜ்வால் நிகாம் வாதிடுகையில், கசாபுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்று வாதிட்டார்.
கசாப் வக்கீல் பவார் வாதிடுகையில், கசாப்புக்கு வயது மிகவும் குறைவு. எனவே அவன் திருந்தி வாழ வாய்ப்பளிக்கும் வகையில், ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றார்.
தண்டனை குறித்த வாதங்கள் முடிந்த நிலையில் இன்று நீதிபதி தஹிளியானி கசாப்புக்கான தண்டனை விவரங்களை வெளியிட்டார்.கசாப் மீதான 86 குற்றச்சாட்டுகளில் 4 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவனுக்கு தூக்கு தண்டனையும், 5 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
தீர்ப்பை நீதிபதி வாசித்து முடித்ததும், ஏதாவது சொல்ல விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வாய் திறக்காமல் அமைதியாக இருந்தான் கசாப். பின்னர் சொல்வதற்கு எதுவும் இல்லை என்று கூறியபடி கதறி அழுதான் கசாப்.
0 கருத்துகள்: on "அஜ்மல் கசாப்புக்கு மரணத்தண்டனை"
கருத்துரையிடுக