துபாய்:அபுதாபி உணவுக்கட்டுப்பாட்டு ஆணையம் சில குளிர்பானங்களையும், பாட்டில் தண்ணீரையும் விற்பதற்கு தடை விதித்துள்ளது.
இதுத் தொடர்பாக அபுதாபி உணவுக்கட்டுப்பாட்டு ஆணையம் (ADFCA-AbuDhabi Food Control Authority) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'ஷார்ஜாவில் செயல்படும் மில்கோ நிறுவனம் தயாரிக்கும் மாம்பழ ஜூஸின் தயாரிப்பில் சில குறைபாடுகளிருப்பதால் அந்த பானத்தை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பைனாப்பிளில் தயாரிக்கப்பட்டு பிலிப்பைன்ஸிலிருந்து இறக்குமதியாகும் டெல்மாண்டே நிறுவன பைனாப்பிள் ஜூஸில் சேர்மானங்களில் (ingredients) பன்றி இறைச்சி சேர்க்கப்பட்டுள்ளதாக பாட்டில் ஒட்டப்பட்டுள்ள லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸல்ஸபீல் நிறுவனத்தால் விற்பனைச் செய்யப்படும் 6 லிட்டர் தண்ணீர் பாட்டில்களில் ப்ரோமைன் வேதிப்பொருள் அளவுக்கதிகமாக கலக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
மில்கோ நிறுவனத்தின் தயாரிப்புகளை அல்பத்தீன் பகுதியில் செயல்படும் அபுதாபி கூட்டுறவு சொசைட்டியிலிருந்து கைப்பற்றப்பட்டன. மேலும் ஃபாத்திமா சூப்பர் மார்கெட், மில்லனியம் சூப்பர் மார்கெட், அல் ஸஃபா சூப்பர்மார்க்கெட் ஆகிய இடங்களிலிருந்து கைப்பற்றப்பட்டன.
டெல்மோண்டேயின் தயாரிப்பான பைனாப்பிள் ஜூஸ் அல்மயா சூப்பர் மார்கெட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது.
ப்ரோமியம் அனுமதிக்கப்பட்ட அளவிற்கும் அதிகமாக கலந்த ஸல்ஸபீல் பாட்டில் தண்ணீர்கள் மிடில்ஈஸ்ட் சூப்பர் மார்கெட்டிலிருந்து கைப்பற்றப்பட்டன.
source:கல்ஃப் நியூஸ்
0 கருத்துகள்: on "டெல்மாண்டே பைனாப்பிள் ஜூஸில் பன்றி இறைச்சியின் சேர்மானம்"
கருத்துரையிடுக