காந்திநகர்:கடந்த நவம்பர் 2005ல், குஜராத் போலீசாரால் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட ஷொராஹ்ப்தீன் ஷேக்கின் அண்னன் ருபாபுத்தீன், குஜராத் மாநில பி.ஜே.பி தலைவர் உட்பட மூன்று மூத்த தலைவர்களுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டிஸில் கூறப்பட்டுள்ளதாவது, "குஜராத் போலிஸின் விசாரனையில் திருப்தி அடையாத தனி நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படிதான் சி.பி.ஐ. இவ்வழக்கை ஏற்று விசாரித்து வருகிறது. ஷொராஹ்ப்தீன் தோழரும் இவ்வழக்கில் நேரில் கண்ட ஒரே சட்சியாளருமான துள்ஸி பிரஜாபதியின் என்கவுண்டர் -சாட்சியை கலைப்பதற்கான முயற்சியாகவும் இருக்கலாம்! என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்தும் உங்களுக்கு தெரியும்.
குஜராத் மாநிலத்தை பி.ஜே.பி தான் ஆளுகிறது. குஜராத் அரசின் அதிகாரிகள் குஜராத் தனி நீதிமன்றத்தில் இவ்வழக்கில் ஆஜராவதை அறிந்தும், நீங்கள் சி.பி.ஐயை காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்ட் என்று விமர்சித்துள்ளீர்கள்!
என் தம்பி ஷொராஹ்ப்தீனை தீவிரவாதி என்றும் கூறியுள்ளீர்கள்! பொது பந்த்(முழு அடைப்பிற்கும்) அழைப்பு விடுத்துள்ளீர்கள்! இது சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டும் அதிகாரிகளின் உரிமை பறிப்பது மட்டுமல்லாமல் நீதி விசாரனையில் அந்நிய நபர்களின் குறுக்கீடுமாகும்.
ஷொராஹ்ப்தீன் போலி என்கவுண்டர் வழக்கை எடுத்து விசாரித்து வரும் சி.பி.ஐக்கு எதிராக தாங்கள் தெரிவித்துள்ள இக்கருத்துகளை ஒரு வாரக் கெடுவிற்குள் விளக்கமளிக்காவிட்டால்- நான் ஏன் நீதிமன்றத்தை அனுகக்கூடாது!" என்று அந்நோடிஸில் கேட்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டிஸ் ரிஜிஸ்டர் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக இந்த பி.ஜே.பி தலைவர்கள் சென்ட்ரல் பியுரோ ஆஃப் இன்வஸ்டிகேஷன் என்ற சி.பி.ஐயை காங்கிரஸ் பியுரோ ஆஃப் இன்வஸ்டிகேஷன் என்று விமர்சித்திருந்தனர்.
குஜராத் மாநில பி.ஜே.பி தலைவர் ரமேஷ் ஃபர்தா, செயளாலர் புருசோதமன் ருபாலா மற்றும் விஜய் ருபானி ஆகிய அம்மூன்று தலைவர்களுக்கும் தான் இந்நோட்டீஸை அனுப்பியுள்ளார் ருபாபுத்தீன்.
source:Twocircles.net
0 கருத்துகள்: on "போலி என்கவுன்டர் வழக்கு - பி.ஜே.பி தலைவர்களுக்கு ஷொராஹ்ப்தீன் அண்னன் வக்கீல் நோட்டிஸ்"
கருத்துரையிடுக