கோழிக்கோடு:கடந்த வெள்ளிக்கிழமையன்று,பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் கடுமையான போராட்டத்தினால் கோழிகோட்டில் நடைபெறவிருந்த அமெரிக்க தூதரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சி இஸ்லாமிக் கவுன்சில் தலைவர் முஹம்மத் பஷர் அராபத் என்பவரால் ஜே.டி.டி.இஸ்லாம் எதீம்கானாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவில் மனித உரிமைகளை பற்றி விழிப்புணர்வு உண்டாக்குவதற்காக யு.எஸ்ன் ஒரு முயற்சியாக யான்கி ராஸ்கல் அழைக்கப்பட்டார். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா இதற்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில், யு.எஸ் உதவ விரும்பினால் ஆஃப்கானிலும், ஈராக்கிலும் குண்டுகளாலும், ஆயுதங்களாலும் அனாதையாக்கப்படுகின்ற குழந்தைகளுக்கு உதவட்டும் போன்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர்.
கருத்தரங்கு நடக்கவிருந்த கான்ஃபரன்ஸ் ஹாலின் நுழைவு வாயிலை போராடத்தினர் முற்றுகையிட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
நமது நிரூபர்
1 கருத்துகள்: on "பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் போராட்டத்தை தொடர்ந்து யு.எஸ் தூதரின் நிகழ்ச்சி ரத்து!"
இந்த நிகழ்வுக்குப்பின் நிச்சயமாக இந்தியாவில் US க்கு எதிரான ஓர் அமைப்பு செயல்படுகிறது என்பதை தெளிவாக உணர்ந்து கொள்வார்கள். இதனால் அவர்களின் குறி நம்மீதும் விழும் நாம் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
கருத்துரையிடுக