அரபு நாடுகளின் 9வது எரியாற்றல் மாநாடு, மே9ம் தேதி கத்தாரின் தலைநகர் தோஹாவில் துவங்கியது. அரபு நாடுகள் எரியாற்றல் ஒத்துழைப்பு என்பது, இம்மாநாட்டின் தலைப்பாகும்.
உலகமயமாகி வரும் பின்னணியில், எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி நாடுகள் எதிர்கொள்கின்ற அறைகூவல்கள், தூய்மை எரியாற்றலின் வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்கள் பற்றி, மத்திய கிழக்கு பிரதேசத்தின் நாடுகளின் எரியாற்றல் துறை அமைச்சர்கள் கூடி விவாதம் நடத்தி வருகின்றனர்.
எரியாற்றல் தொடர்பான பல்வகை துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உலகளவில் எரியாற்றல் விநியோக பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று குவெய்தின் எரியாற்றல் துறை அமைச்சர் அஹமத் அல்-அபுதுல்லா அல் சபாஹ் தெரிவித்தார்.
source:CRI online
0 கருத்துகள்: on "அரபு நாடுகளின் எரியாற்றல் மாநாடு"
கருத்துரையிடுக