11 மே, 2010

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 70க்கும் மேற்பட்டோர் மரணம்

பாக்தாத்:ஈராக்கில் நேற்று நடந்த குண்டுவெடிப்புகளிலும் துப்பாக்கிச் சூட்டிலும் எழுபதிற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

பத்திற்கும் மேற்பட்ட போலீஸ், ராணுவ செக்போஸ்ட்கள் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

நேற்று அதிகாலை மூன்று மணியிலிருந்து தாக்குதல் தொடங்கியது. வாகனங்களில் வந்த ஆயுத தாங்கிய நபர்கள் செக்போஸ்ட்கள், ராணுவ வாகனங்கள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்திவிட்டு வேகமாக தப்பிச் சென்றார்கள்.

முன்னரே திட்டமிட்டு ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட தாக்குதல் இது என்று கருதப்படுகிறது. அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிரான போராளிகள்தான் இத்தாக்குதலுக்கு பின்னணியில் உள்ளனர் எனக் கருதப்படுகிறது.

சுவைரியா நகரில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்புகளில் எட்டு சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். காரிலும், சாலையிலும் பொருத்தப்பட்டிருந்த குண்டுகள் இங்கு வெடித்தன.எழுபதிற்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

தெற்கு பாக்தாதில் ஹில்லா நகரில் நடந்த இரட்டைக் குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டனர் என பாபில் மாகாண போலீஸ் அறிவித்துள்ளது. நேற்று மாலை 6 மணிக்கு இச்சம்பவம் நடந்தது.

கராதா, இஸ்கந்தரியா, ஃபலூஜா ஆகிய இடங்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. பொதுத்தேர்தல் நடைபெற்று இரண்டு மாதங்கள் ஆகியும் புதிய அரசு உருவாக்குவதில் தாமதமாகுவதால் ஏற்பட்டுள்ள ஸ்திரத்தன்மையற்ற சூழலில் புதிய தாக்குதல்கள் நடைபெற்றது கவனிக்கத்தக்கதாகும்.

சமீபகாலத்தில் மந்தநிலையிலிருந்த எதிர்ப்பு போராட்டம் மீண்டும் பலம் பெறுவதற்கான அறிகுறிதான் இத்தாக்குதல்கள் என செய்தி ஏஜன்சிகள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 70க்கும் மேற்பட்டோர் மரணம்"

கருத்துரையிடுக