26 மே, 2010

கோவா குண்டுவெடிப்பின் சூத்திரதாரி பொறியியல் கல்லூரி மாணவர்

பனாஜி:கடந்த ஆண்டு தீபாவளிக்கு முந்திய தினம் கோவா மாநிலத்தின் மர்கோவாவில் நடந்த குண்டுவெடிப்பின் தொழில்நுட்ப வல்லுநராக செயல்பட்டவர் பொறியியல் கல்லூரி மாணவர் என தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கூறியுள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலம் கொங்கன் பகுதியைச்சார்ந்த தனஞ்செய் அஷ்தேகர்தான் அந்த பயங்கரவாதி.

வெடிப்பொருட்கள் நிர்மாணிப்பதற்கு தேவையான பொருட்களை சேகரித்தது இவர்தான். குண்டுவெடிப்பிற்கு முன்பு இவை இரண்டு இடங்களில் வெற்றிகரமாக சோதனைச் செய்யப்பட்டுள்ளது என என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.

புலனாய்விற்கு இடையே அஷ்தேகரின் பங்கினை கோவா போலீசாரும், என்.ஐ.ஏ வும் இதனை கண்டறிந்துள்ளன. வெடிப்பொருட்களை இணைப்பதற்கான எலக்ட்ரானிக் சாதனங்களை அஷ்தேகரின் அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இச்சல்கரன்சியில் டி.கெ.டி.இ பொறியல் கல்லூரியில் மாணவர்தான் அஷ்தேகர். கோலாலம்பூரில் பிரிண்டிங் பிரஸின் உரிமையாளரான ராஜேஷ் ஸோனர் அஷ்தேகருக்கு உதவியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அஷ்தேகர் டவுண்லோடு செய்த சர்க்யூட் வரைப்படத்தின் அடிப்படையில் 18 சர்க்யூட் வரைப்படங்கள் அச்சடித்ததாக சோனார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அஷ்தேகர் தெற்கு மும்பையில் லாமிங்டன் ரோடிலிருந்து குண்டுவெடிப்பிற்கு தேவையான இரண்டு ட்ரான்சிஸ்டர்கள் வாங்கியுள்ளார். இவ்வழக்கில் மிகவும் வயதுக் குறைந்த குற்றவாளி அஷ்தேகர்.

வெடிக்குண்டு நிர்மாணிப்பதில் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள குற்றவாளி வினய் தலேகர் போண்டா பகுதியிலிலுள்ள கடையிலிருந்து வெடிக்குண்டு நிர்மாணிப்பதற்கு தேவையான பாட்டரிகளும், இன்சுலேசன் டேப்புகளும் வாங்கியுள்ளார்.

கோவா குண்டுவெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகையை சமர்ப்பித்திருந்தாலும், புலனாய்வின்போது கைப்பற்றிய பொருட்களின் சோதனைக்கூட பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை.

பரிசோதனை அறிக்கையை வல்லுநர்களின் அபிப்ராயத்துடன் பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தானின் 11 உறுப்பினர்கள் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் குண்டுவெடிப்பின்போது கொல்லப்பட்டனர். நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 பேர் தலைமறைவாகியுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கோவா குண்டுவெடிப்பின் சூத்திரதாரி பொறியியல் கல்லூரி மாணவர்"

கருத்துரையிடுக