வாஷிங்டன்:அல்காயிதாவை எதிர் கொள்கிறோம் என பொய்கூறி அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ ஆளில்லா போர் விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தானில் நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்தவேண்டுமென ஐ.நா கூறியுள்ளது.
இதுத்தொடர்பான அறிக்கையை சட்டவிரோத கொலைகளைக் குறித்து புலனாய்வு மேற்கொண்ட ஐ.நா வின் தூதர் ஃபிலிப் ஆல்ஸன் ஐ.நா மனித உரிமைக் கமிட்டிக்கு வருகிற ஜூன் மூன்றாம் தேதி வழங்குவார் என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிவிலியன் கொலைகளைக் குறித்து விசாரணை நடத்த ரகசிய புலனாய்வு ஏஜன்சிகளைவிட ராணுவத்திற்குதான் பொறுப்புள்ளது என ஆல்ஸன் சுட்டிக் காட்டுகிறார்.
சி.ஐ.ஏவின் தாக்குதல்களைக் குறித்து எவ்வித கேள்வியும் எழுவதில்லை. போர்க்களத்தில் எதிரிகளைக் கொல்வதற்கு ராணுவத்திற்குதான் சர்வதேசச் சட்டத்தின்படி அனுமதியுள்ளது.
சீருடையில்லாத ராணுவத்தினர் கொலைகளை நடத்துவது போர் சட்டங்களை மீறுவதாகும் என 2007 ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W புஷ் வெளியிட்ட கொள்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார் என ஆல்ஸன் கூறுகிறார்.
ராணுவ உடை அணியாத சி.ஐ.ஏ வின் உளவாளிகள் நடத்தும் ஆளில்லா விமானத்தாக்குதல்(ட்ரோன்) போர் குற்றமாகும். அத்தோடு ஆளில்லா விமானங்கள் நடத்திவரும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாகவும் ஆல்ஸன் குறிப்பிடுகிறார்.
2007 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் இம்மாதிரியான தாக்குதல்கள் 5 ஆக இருந்ததென்றால் 2008 ஆம் ஆண்டில் 35 ஆக அதிகரித்துள்ளது.
ஒபாமா அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் ஆளில்லா விமானத்தாக்குதல் முக்கியமான தாக்குதல் யுத்தியாக மாறிவிட்டது என ஆல்ஸன் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆளில்லா விமானத் தாக்குதலை நிறுத்த சி.ஐ.ஏவுக்கு ஐ.நா உத்தரவு"
கருத்துரையிடுக