29 மே, 2010

ஆஃப்கானிலிருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறக்கோரும் தீர்மானம்- அமெரிக்க செனட் நிராகரித்தது

வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறுவதற்கான கால விபரத்தை விளக்கும் அறிக்கையை கொண்டுவந்த தீர்மானத்தை அமெரிக்க செனட் நிராகரித்தது.

ஜனநாயகக்கட்சியின் பிரதிநிதி ரஸ் ஃபின்கோல்ட் கொண்டுவந்த இந்த தீர்மானத்தை 80 உறுப்பினர்களில் 18 பேர் மட்டுமே ஆதரித்தனர்.

அமெரிக்க ராணுவம் ஆப்கானிலிருந்து வருகிற 2011 ஆம் ஆண்டு வாபஸ் பெறப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருந்த போதிலும், குறிப்பிட்ட தேதியை அறிவிக்கவில்லை என ஃபின்கோல்ட் சுட்டிக் காட்டினார்.

ராணுவத்தின் லட்சியத்தை பூர்த்திச்செய்ய எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை ஒபாமா அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களிடம் வெளிப்படையாக கூறவேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

ஃபின்கோல்ட் கொண்டுவந்த தீர்மானத்திற்கு அதிக ஆதரவு கிடைக்காவிட்டாலும் கூட டிக்டர்பின், பாட்டிமுரே, பைரோன் டோர்கன், ஷூக் ஷூமர் உள்ளிட்ட ஜனநாயககட்சியின் செனட்டர்கள் ஆதரவு கிடைத்தது.

அதிகமான செலவும், அதிகரித்து வரும் அமெரிக்க ராணுவ வீரர்களின் மரணமும் செனட்டர்களுக்கிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கில் மட்டும் 70 ஆயிரம் கோடி டாலரை அமெரிக்கா செலவழித்துள்ளது. 2003 ஆம் ஆண்டில் ஈராக்கை அமெரிக்கா அநியாயமாக ஆக்கிரமித்ததிலிருந்து இதுவரை 4400 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான நிதிக்கு அமெரிக்க செனட் அங்கீகரித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 30 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினரை கூடுதலாக அனுப்ப போவதாக கடந்த டிசம்பர் மாதம் ஒபாமா அறிவித்திருந்தார்.

போர் செலவுக்காக 3300 கோடி டாலருக்கு செனட் அனுமதியளித்துள்ளது. ஈராக்கில் தேவைப்படும் செலவுகளுக்காகவும் இந்தத் தொகை விநியோகிக்கப்படும். ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் போர் செலவுகளுக்காக அமெரிக்க காங்கிரஸ் இந்த ஆண்டு 13 ஆயிரம் கோடி டாலர் தொகைக்கு அனுமதியளித்திருந்தது.

ஆப்கானிஸ்தானில் மட்டும் அமெரிக்கா 2001 ஆம் ஆண்டு முதல் 30 ஆயிரம் கோடி டாலருக்கு மேலாக செலவழித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆஃப்கானிலிருந்து அமெரிக்க ராணுவம் வாபஸ் பெறக்கோரும் தீர்மானம்- அமெரிக்க செனட் நிராகரித்தது"

கருத்துரையிடுக