29 மே, 2010

ஆப்பிள் நினைவாற்றலை அதிகரிக்கும்:ஆய்வில் தகவல்

லண்டன்:'An Apple a day keeps the doctor away' ‘ஆப்பிள் தினம் ஒன்று சாப்பிடுங்கள் மருத்துவரை அகற்றுங்கள்’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

ஆப்பிளில் பல்வேறு வகையான நோய் நிவாரணங்கள் இருப்பதாக முன்பே பல்வேறு ஆய்வுகள் வெளிவந்துள்ளன. தற்பொழுது ஆப்பிள் சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஆப்பிளில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ஸ் நினைவாற்றலை அதிகரித்து மூளையின் செயல்திறன் இழப்பதை தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

பல வகையான கேன்ஸர்கள் ஏற்படுவதை ஆப்பிள் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது. இதற்காக தினமும் இரண்டு ஆப்பிளோ அல்லது ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸோ உட்கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆப்பிள் நினைவாற்றலை அதிகரிக்கும்:ஆய்வில் தகவல்"

கருத்துரையிடுக