வாஷிங்டன்:அமெரிக்க அரசின் தகவல் தொடர்புத்துறையின் முக்கியப் பதவியில் இந்திய வம்சாவழியைச் சார்ந்த க்ஷேமேந்திரா பால் நியமிக்கப்பட்டுள்ளார்.தகவல் தொடர்பு பகிர்வு ப்ரோக்ராம் மேனேஜராக பால் நியமிக்கப்பட்டுள்ளார்.இத்துறை அரசின் பல்வேறு ஏஜன்சிகள் மற்றும் துறைகளிடமிருந்து தீவிரவாதத்துடன் தொடர்புடைய விபரங்கள் சேகரித்து சீராக்கி அளிக்கும் நிறுவனமாகும்.
1950 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்த பாலின் பெற்றோர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்தவர்கள்.
தேசிய பாதுகாப்பு பணியாளர்களின் மாநாடுகளில் துணை ஆலோசகராக இவர் பணியாற்றுவார் என அரசின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர் அமெரிக்காவில் தகவல் தொடர்புத்துறையின் முக்கிய பதவியில் பொறுப்பேற்பு"
கருத்துரையிடுக