சிறைகளில் ஏற்பட்டுள்ள இட பற்றாக்குறையை போக்க 92 ஆயிரம் சிறைக் கைதிகள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள பலர் விசாரணைக் கைதிகளாக சிறைகளில் உள்ளனர். சுமார் 3 லட்சம் அளவுக்கு விசாரணைக் கைதிகள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் சிறைகளில் இட பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விசாரணைக் கைதிகளை விடுவிக்கலாம் அல்லது ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்று பல்வேறு உயர் நீதிமன்றங்கள் கருத்து தெரிவித்தன.
உயர் நீதிமன்றங்களின் கருத்துகளை ஏற்றுக்கொண்ட மத்திய சட்டத்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி முதல் பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள விசாரணைக் கைதிகளை ஜாமீனிலோ அல்லது வழக்கிலிருந்தோ விடுவித்து வருகிறது. இந்தத் திட்டம் வரும் ஜூலை வரை அமலில் இருக்கும்.
கடந்த பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 92 ஆயிரம் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ள வழக்கின் தன்மையைப் பொருத்து அவர்களுக்கு விடுதலை அளிக்கப்படுகிறது அல்லது ஜாமீன் வழங்கப்படுகிறது.
சிறைகளில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை பரிசீலிக்குமாறு 21 உயர் நீதிமன்றங்களையும் மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்த பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 29,009 விசாரணைக் கைதிகளை அலாகாபாத் உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது அல்லது ஜாமீனில் விடுவித்தது.
இதேபோல ஆந்திர உயர்நீதிமன்றம் 9,116 விசாரணைக் கைதிகளையும், தில்லி உயர் நீதிமன்றம் 8,701 விசாரணைக் கைதிகளையும், மும்பை உயர் நீதிமன்றம் 7,252 விசாரணைக் கைதிகளையும், கொல்கத்தா உயர் நீதிமன்றம் 287 விசாரணைக் கைதிகளையும் விடுவித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 1,500 சிறைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் சுமார் 2 லட்சம் கைதிகளை மட்டுமே அடைக்க முடியும். ஆனால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் இருந்ததால் விசாரணைக் கைதிகளை விடுவிக்கவோ அல்லது ஜாமீனில் வெளியே அனுப்பவோ மத்திய சட்டத்துறை அமைச்சகம் முடிவு செய்தது.
dinamani

0 கருத்துகள்: on "இடப் பற்றாக்குறை சிறைகளிலிருந்து 92ஆயிரம் விசாரணைக் கைதிகள் விடுவிப்பு"
கருத்துரையிடுக