28 மே, 2010

பாகிஸ்தானுக்கு உளவு:கடற்படை ஊழியர் கைது

இந்திய ராணுவ ரகசியங்களை உளவு பார்த்து பாகிஸ்தான் தூதரகத்துக்குக் கூறிய சந்த்குமார் பிரசாத்(24) என்ற கடற்படை ஊழியரை டெல்லி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

சந்த்குமார், மும்பையில் உள்ள கடற்படையின் விமானப் பராமரிப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் சில ராணுவ ரகசியங்களை உளவு பார்த்து மற்றொரு நபர் மூலமாக பாகிஸ்தான் தூதரத்துக்கு சொன்னதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த சந்த் குமாரை புதன்கிழமை டெல்லி ரயில் நிலையத்தில் சிறப்புப் படை போலீஸார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து விமானப்படையைப் பற்றிய ரகசியத் தகவல்கள் மற்றும் புகைப்படங்கள், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள ராணுவ முகாமின் வரைபடம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாகிஸ்தானுக்கு உளவு:கடற்படை ஊழியர் கைது"

கருத்துரையிடுக