புதுடில்லி:டில்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலின் அறையில், தோட்டாக்களை பதுக்கி வைத்திருந்த இத்தாலியைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
டில்லியில் ராடிசன் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டல் உள்ளது. இங்குள்ள அறை எண் 448ல், இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜியாவன்னி செக்கோமல்லோ, டொனடோ டுங்கெல்லோ மற்றும் கியுலியோ பொனெட்டோ ஆகியோர் தங்கியிருந்தனர்.கடந்த 24ம் தேதி ஓட்டல் அறையை காலி செய்து விட்டு, இவர்கள் புறப்பட்டு சென்று விட்டனர்.
இந்நிலையில், இவர்கள் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்வதற்காக நேற்று வந்த ஓட்டல் ஊழியர்கள், "ஏசி' மெஷினில் இருந்து வித்தியாசமான சத்தம் வருவதை கவனித்தனர். அதற்குள் பார்த்த போது, 26 தோட்டாக்கள் பாலித்தீன் உறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர். ஓட்டலில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் மூலம், அவர்கள் மூவரும் அடையாளம் காணப்பட்டனர்.
முக்கிய நகரங்களுக்கு இதுகுறித்த தகவல்களை டில்லி போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று காலை பொனெட்டோ என்பவர் மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்; மற்ற இருவரும் புனேயில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் டில்லி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

0 கருத்துகள்: on "தோட்டாக்கள் பதுக்கி வைத்திருந்த 3 இத்தாலியர்கள் டில்லியில் கைது"
கருத்துரையிடுக