28 மே, 2010

மாஹியில் குண்டுவீச்சு:இரண்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலி

மாஹியில் குண்டுவீச்சில் இரண்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலியாயினர்.

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட மாஹி கேரளாவுக்கு அருகில் உள்ளது. இங்கு கொலைவழக்குத் தொடர்பாக மாஹி நீதிமன்றத்தில் ஆஜாராகிவிட்டு பைக்கில் வந்துக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ் என்ற ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்த கெ.விஜித்(வயது 23), ஷினோஜ்(வயது 32) ஆகியோர் மீது அப்பொழுது நியூ மாஹி கல்லாயி என்ற இடத்தில் சுங்கம் பாலத்தின் அருகில் வைத்து இவர்கள் மீது ஒரு கும்பல் வெடிக்குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிவிட்டனர்.ஆனால் தாக்குதலில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் இறந்துவிட்டனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து மாஹியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்திற்கு அரசியல் பின்னணி உள்ளதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலுக்கு காரணம் சி.பி.எம் தொண்டர்கள் என பா.ஜ.க குற்றஞ்சாட்டுகிறது. ஆனால் இதனை சி.பி.எம் தலைமை நிராகரித்துள்ளது.

ஏராளமான கிரிமினல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொல்லப்பட்ட இருவரும் பயணம் செய்த பைக்கில் வெடிக்குண்டுகளிருந்ததாகவும் அவை வெடித்துதான் இவர்களிருவரும் இறந்ததாக சி.பி.எம் கூறுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மாஹியில் குண்டுவீச்சு:இரண்டு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பலி"

கருத்துரையிடுக