28 மே, 2010

விமானவிபத்தில் சிக்கியவர்களின் குடும்பங்களுக்கு உதவ எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் களத்தில்

புதுடெல்லி:மங்களூர் பாஜ்பே விமானநிலையத்தில் நடந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானவிபத்தில் சிக்கி மரணமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் கிடைப்பதற்கு உதவுவோம் என எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அறிவித்துள்ளது.

விமான விபத்தில் மரணித்தவர்கள் வேலைப் பார்த்த துபாய், ஷார்ஜா ஆகிய எமிரேட்ஸ்களின் நிறுவனங்களிடமிருந்து நிவாரணங்கள் கிடைப்பதற்கான எல்லா உதவிகளையும் எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் செய்யும்.

இந்திய தூதரகத்துடன் தொடர்பு கொண்டு மரணித்தவர்களின் விபரங்கள், உறவினர்களின் விலாசங்கள் ஆகியவற்றை ஃபெடர்னிடி ஃபாரம் சேகரித்துள்ளது.

விசா ரத்துச் செய்தல், வேலைப்பார்த்த கம்பெனியிலிருந்து கிடைக்கவேண்டிய உதவித்தொகை, மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிவாரணங்களை பெற்றுத் தருவது தொடர்பான சட்ட உதவிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் செய்வதற்கு ஹெல்ப்லைன் செயல்படும் என எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் நிர்வாகி முஹம்மது அஃபாக் நாகூர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

சிறுபான்மையினருக்கான உதவித்தொகைகள் கிடைப்பதற்கான உதவிகளையும் ஃபெடர்னிடி ஃபாரம் செய்யும்.

இந்தியாவில் சட்ட உதவி கிடைப்பதற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தலைவர்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாக அஃபாக் தெரிவிக்கிறார்.

போதிய உதவிகளை பெற்றுத் தருவதற்காக எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அபுதாபியிலும், துபாயிலும் இரண்டு சிறப்பு பிரிவுகளை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஏற்பட்ட உடனேயே உறவினர்களை ஊருக்கு அனுப்புவது உள்ளிட்ட உதவிகளை ஃபெடர்னிடி ஃபாரம் செய்ததாக அஃபாக் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "விமானவிபத்தில் சிக்கியவர்களின் குடும்பங்களுக்கு உதவ எமிரேட்ஸ் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் களத்தில்"

கருத்துரையிடுக