28 மே, 2010

இஸ்ரேலின் தடையை புறக்கணித்து காஸ்ஸாவின் எல்லையை அடைந்த நிவாரண கப்பல்

காஸ்ஸா:இஸ்ரேலின் தடையை புறக்கணித்து காஸ்ஸாவிற்கு சென்ற நிவாரண கப்பல் எல்லையை அடைந்துள்ளது.

10 ஆயிரம் டன் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஒன்பது கப்பல்கள் காஸ்ஸாவை நெருங்கியுள்ளன. 50 நாடுகளிலிருந்து 700 பிரதிநிதிகள் அடங்கிய ஃப்ரீடம் ஃப்ளோடில்லா நிவாரண கப்பல்களை தடுக்க இஸ்ரேலிய படையினர் அஷ்தூத் துறைமுகத்தில் செக்போஸ்ட் நிர்மாணித்துள்ளது.

மோதலை தவிக்கவும், நிவாரணக் குழுவினருடன் ஒத்துழைக்கவும் ஐ.நா பொதுச்செயலாளர் பன்கீமூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஸ்ஸாவிற்கு செல்லும் கப்பலில் பயணம் செய்யும் சைப்ரஸ், க்ரீஸ், அயர்லாந்து, ஸ்வீடன், துருக்கி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு எதிராக இஸ்ரேல் வாரண்ட் பிறப்பித்திருந்தாலும் அந்நாடுகள் அதனை புறக்கணித்துள்ளன.

இக்கப்பல்களில் இஸ்ரேலிய எம்.பி ஹனீன்சுபி ஆபியின் தலைமையில் ஏராளமான இஸ்ரேலிய மனித உரிமை ஆர்வலர்களும் உள்ளனர்.

இவர்களை கைது செய்யப் போவதாகவும், ஃபலஸ்தீனர்களை சிறையிலடைப்போம் எனவும்,வெளிநாட்டவர்களை நாடு கடத்துவோம் எனவும் இஸ்ரேல் மிரட்டியுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேலின் தடையை புறக்கணித்து காஸ்ஸாவின் எல்லையை அடைந்த நிவாரண கப்பல்"

கருத்துரையிடுக