லாகூர்:லாகூரில் பள்ளிவாசல்கள் மீது நடந்த தாக்குதலில் 80பேர் கொல்லப்பட்டனர் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டது. கார்ஹி ஷாஹூ, மோடல் டவுண் ஆகிய இடங்களிலிலுள்ள காதியானிகளின் பள்ளிவாசல்கள் மீதுதான் இன்று(28/05/2010) மதியம் தாக்குதல் நடந்தது.
ஜும்ஆ தொழுகைக்காக வந்த 1500 பேர் தாக்குதல் நடந்த வேளையில் பள்ளிவாசலில் இருந்தனர்.இவர்களை தாக்குதல்காரர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர்.
மாலையில் இரு பள்ளிவாசல்களிலும் தங்கியிருந்த ஆயுதமேந்திய தாக்குதல்காரர்களை பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்து பிணைக்கைதிகளை விடுவித்தனர்.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் பலியானார். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்களையும், இறந்தவர்களையும் ஜின்னா மருத்துவமனையில் கொண்டுச் செல்லப்பட்டனர்.
தெஹ்ரீக்-இ-தாலிபான் பஞ்சாப் இந்தத் தாக்குதலில் பொறுப்பை ஏற்றுள்ளதாக ஜியோ டி.வி கூறுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் போலீஸ் படை முகாமிட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பாகிஸ்தானில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் 80 பேர் மரணம்"
கருத்துரையிடுக