புதுடெல்லி:ஷா ஃபைஸல் கஷ்மீரைஸ் சார்ந்த டாக்டரான இவர் இந்தியாவின் உயர் ஆட்சிப் பணிக்குரிய நபர்களை தேர்ந்தெடுக்கும் சிவில் சர்வீஸ் தேர்வில் (UPSC) இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து சாதனைப்படைத்துள்ளார்.
680 ஆண்களும், 195 பெண்களும் உட்பட மொத்தம் 875 பேர் தேர்வுஸ் செய்யப்பட்டுள்ள சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் ஷா ஃபைஸல்.
ஷா ஃபைஸல் ஸ்ரீநகரில் மருத்துவராக பணியாற்றி வருபவர். ஃபைஸலின் சாதனை என்னவென்றால் முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸில் வெற்றிபெற்று அதுவும் இந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்திருப்பது மகத்தான சாதனைதான்.
சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்த ஷா ஃபைஸல் கூறுகையில், ”நான் எனது கடின முயற்சியில் முழு நம்பிக்கை வைத்திருந்தேன். அல்லாஹ்வின் கருணையும், எனது குடும்பத்தாரின் பிரார்த்தனையும் வெற்றிக்குக் காரணம்” என்றார்.
ஷா ஃபைஸல் 1983ஆம் ஆண்டு கஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு ஒரு சகோதரனும், ஒரு சகோதரியும் உள்ளனர். இவரது தாயார் பெயர் முபீனா ஜி.ஃபைஸல் ஸ்ரீநகரிலிலுள்ள ஜீலம் மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். தகவல் உரிமை பெறும் சேவகராக ஃபைஸல் தனது கல்லூரி நாட்களில் பணியாற்றியுள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு ஆசிரியரான இவரது தந்தை குலாம் ரசூல் ஷாவை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றதையடுத்து ஸ்ரீநகர் குல்பஹார் காலனியில் தமது இருப்பிடத்தை மாற்றினார்கள் இவரது குடும்பத்தினர்.
இந்தியாவில் கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு மனு அளித்தவர்கள் மொத்தம் 4,09,110 பேர்.இதில் 1,93,091 பேர் ஆரம்பக்கட்ட தேர்வை (Preliminary Exam) எழுதியுள்ளனர். அதில் 12,026 பேர் பிரதான தேர்வை (Main Exam) எழுதியுள்ளனர்.
இவர்களில் 2,432 பேர் ஆளுமைத் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களிலிருந்துதான் 875 பேர் தேர்வுஸ் செய்யப்பட்டனர். சிவில் சர்வீஸ் என்பதில் IAS,IFS,IPS உள்ளிட்ட ஆட்சியல் தொடர்பான சேவைப்பணிகள் அடங்கும்.
Source:twocircles.net
அரச பயங்கரவாதத்தின் மிக மோசமான விளைவுகளை சந்தித்துவரும் கஷ்மீரிலிருந்து முஸ்லிம் சமுதாய இளைஞர்களுக்கு கல்வியில் முன்மாதிரியாக மாறியுள்ள ஷா ஃபைஸலுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி வெற்றிகரமாக தொடர வாழ்த்துகிறோம்.
பாலைவனத்தூது

0 கருத்துகள்: on "சிவில் சர்வீஸ் தேர்வு: கஷ்மீர் முஸ்லிம் டாக்டர் முதலிடம் பிடித்து சாதனை"
கருத்துரையிடுக