3 மே, 2010

அனைத்து முஸ்லிம்களையும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக அறிவிக்கவேண்டும்: PFI ஏற்பாடுச் செய்த சமுதாய தலைவர்களின் சங்கமத்தில் கோரிக்கை

புதுடெல்லி:மத்திய அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களிலும் இடஒதுக்கீடு கிடைப்பதற்காக நாடு முழுவதுமுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக அறிவிக்கவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புதுடெல்லியில் ஏற்பாடுச் செய்த சமுதாயத்தலைவர்களின் சங்கமத்தில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.அரசு வேலைகளிலும், கல்வி நிலையங்களிலும் முஸ்லிம்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்காக மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

தற்பொழுது முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இல்லாத மாநிலங்களில் அங்குள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகையின் சதவீதத்திற்கு தக்கவாறு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். முஸ்லிம் இடஒதுக்கீட்டில் வாய்ப்பு அளிக்கும்பொழுது அதில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

அட்டவணைப்படுத்தப்பட்ட(SC) ஜாதியினரை விட மிகவும் மோசமான சூழலிருப்பதாக கமிஷன்கள் கண்டறிந்த முஸ்லிம்களை SC பிரிவில் சேர்க்க சட்டம் இயற்ற வேண்டும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமுல்படுத்தும்பொழுது ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு உள் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் இக்கூட்டத்தில் கோரப்பட்டது.

மிஷ்ரா கமிஷன் அறிக்கையை இரண்டு வருடமாக கிடப்பில் போட்டுவிட்டு நிர்பந்தத்தின் அடிப்படையில் பாராளுமன்றத்தில் எந்தவொரு பின் நடவடிக்கை அறிக்கை இல்லாமல் தாக்கல் செய்த நடவடிக்கை ஜனநாயகத்தின் அந்தஸ்திற்கு உகந்ததல்ல என சிறப்புரை நிகழ்த்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் இ.எம்.அப்துற்றஹ்மான் குற்றஞ்சாட்டினார்.

ஒரு கமிஷனும் சிபாரிசுச் செய்யாத மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ராஜ்யசபையில் நிறைவேற்றியது அரசியல் கட்சித் தலைமைகளின் ரகசியத் திட்டத்தை வெளிப்படுத்துகிறது.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்.பி.செய்யத் ஷஹாபுத்தீன், பேராசிரியர் ஜி.என்.சாயிபாபா ஆகியோர் உரைநிகழ்த்தினர்.

பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம்களின் தொழில் மற்றும் சமூகச் சூழல்களைக் குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலக் கிளைகள் அறிக்கையை தாக்கல் செய்தன. வி.பி.நஸிருத்தீன்(கேரளா), முஹம்மது அலி ஜின்னா(தமிழ்நாடு), முஹம்மது இல்லியாஸ் தும்பெ(கர்நாடகா), நாஸிர் அஹ்மத்(ஆந்திரா), முஹம்மது ஸாதிக்(மஹாராஷ்ட்ரா), ஹாஃபிஸ் மன்சூர் அலிகான்(ராஜஸ்தான்), முஹம்மது ஷஹாபுத்தீன்(மேற்கு வங்காளம்), பெஞ்சமின் ஷா(மணிப்பூர்) ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கெடுத்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அனைத்து முஸ்லிம்களையும் பிற்படுத்தப்பட்ட சமூகமாக அறிவிக்கவேண்டும்: PFI ஏற்பாடுச் செய்த சமுதாய தலைவர்களின் சங்கமத்தில் கோரிக்கை"

கருத்துரையிடுக