15 ஜூன், 2010

ஜார்கண்ட்டில் மாவோயிஸ்ட் போராளிகள் 10 பேர் போலீஸாரால் சுட்டுக்கொலை

ஜார்கண்ட்டில் போலீசார் நடத்திய வேட்டையில் மாவோயிஸ்ட் போராளிகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜார்கண்ட் மாநிலம் போர்கத் காட்டுப்பகுதியில், மத்திய ரிசர்வ் போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் 2 ஆயிரம் பேர் நக்சல் வேட்டை நடத்தினர். இதற்கு ‘ஆபரேஷன் ஹாக்’ என பெயரிடப்பட்டது. இதில் 10 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த வேட்டையில் நக்சலைட்களின் 8 முகாம்கள் அழிக்கப்பட்டன. அங்கிருந்து 35 கண்ணி வெடிகளை போலீசார் கைப்பற்றினர். இங்கு 900 மாவோயிஸ்ட்கள் தங்கியிருந்தனர் என கூறப்படுகிறது.

போர்கத் காட்டுப் பகுதியில் 3 ஹெலிகாப்டர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஜார்கண்ட்டில் மாவோயிஸ்ட் போராளிகள் 10 பேர் போலீஸாரால் சுட்டுக்கொலை"

கருத்துரையிடுக