15 ஜூன், 2010

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர்:தனது தவறை ஒப்புக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம்

பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் தொடர்பாக விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு செல்லாமலேயே முன்னர் மறுபதிப்பாக விசாரணைக்குழு வழங்கிய அறிக்கையையே அளித்த தங்களின் தவறை ஓப்புக் கொண்டுள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் படுகொலை சம்பவத்திலிருந்த மர்ம முடிச்சுகளை, காவல்துறையின் திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறலை, சம்பவம் நடைபெற்ற ஓராண்டுக்கு பிறகு வெளிக்கொணர்ந்தது தேசிய மனித உரிமை ஆணையம்.

முன்னதாக தேசிய மனித உரிமை ஆணையம் இச்சம்பவத்தை 1993 NHRC சட்டப்பிரிவின் கீழ் விசாரித்தது. இச்சரத்துபடி மனித உரிமை ஆணையம் முதலில் சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து அறிக்கையினை கேட்கும். அவ்வாறு அளிக்கப்படும் அறிக்கையில் ஆணையம் திருப்தியடைந்தால் மேற்கொண்டு விசாரணை நடத்தாது. திருப்தி அடையவில்லையெனில் விசாரனையை தொடரும்.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் படுகொலை சம்பவத்தில் மனித உரிமை ஆணையம் சம்பந்தப்பட்ட துறை அளித்த ஆவணத்தில் திருப்தியடைந்து தனது உண்மை கண்டறியும் குழுவினை சம்பவ இடத்திற்கு அனுப்பவில்லை தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC).

மேலும் காவல்துறையினரால் கொல்லப்பட்ட அதீஃப் அமீன் மற்றும் முகம்மது ஷாஜித் குடும்பத்தினரையும் மனித உரிமை ஆணையம் சந்திக்கவில்லை.

என்கவுண்டர் படுகொலையில் கொல்லப்பட்ட இருவரின் குடும்பத்தினரும் காவல்துறையினரின் மீது கூறிய குற்றச்சாட்டுகளையும் செவிக் கொடுத்தும் கேட்கவில்லை.

மேலும் என்கவுண்டர் படுகொலை சம்பவத்தின் போது துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த காவல்துறை ஆய்வாளர் மோகன் சந்த சர்மாவிடமும் அவர் குடும்பத்தினரிடமும் கூட எதனையும் விசாரிக்கவில்லை. விசாரணையினையும் தொடரவில்லை தேசிய மனித உரிமை ஆணையம் (NHRC).

சம்பந்தப்பட்ட துறை அளித்த ஆவணத்தையே ஜூலை 2009ல் அறிக்கையாகவும் தாக்கல் செய்தது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் இச்செயலை சட்டவரம்பிற்குட்பட்ட மனித உரிமைகளை கண்காணிக்கும் குழு கடுமையாக கண்டித்தது.

சம்பந்தப்பட்ட துறை அளித்த ஆவணத்தில் கள விசாரணை நடைபெறவில்லை என்பது அப்ரோஸ் ஆலம் சாஹில் என்பவர் தாக்கல் செய்த தகவலறியும் உரிமை மனுவின் மூலம் ஏப்ரல் 6, 2010 அன்று வெளிப்பட்டது.

அவர் தனது மனுவில் மேற்கூறிய வினாக்களை குறிப்பிட்டு பதில் கேட்டிருந்தார். அதற்கு டெல்லி உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்படி மேற்கொண்ட விசாரணையில் எங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை சமர்பித்த ஆவணத்தில் மோதல் படுகொலை சம்பவத்தில் எந்த விதமான மனித உரிமைகளும் மீறப்படவில்லை என குறிப்பிட்டிருந்தது அதனை தான் நாங்கள் விசாரணை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளோம் என்று கூறியிருந்தது.

அரசு, காவல்துறை, அதிகார வர்க்கத்தினர் தேச மக்களின் தனி மனித உரிமையில், தலையீடு செய்யும் தலையிடுகளையும் அத்துமீறல்களையும் கண்காணித்து கண்டிக்க வேண்டிய தேசிய மனித உரிமை ஆணையம் உரிமை மீறல்களில் ஈடுபடுபவர்களின் அறிக்கையே ஆவணமாகவும், விசாரணை அறிக்கையாகவும் அளிப்பது இந்திய தேசிய மனித உரிமையின் ஆபத்தான அறிகுறியாகும்.இது மனித உரிமை ஆர்வலர்கள் கவனத்துடன் நோக்கவேண்டிய கவலைக்குரிய ஒரு விசயமாகும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாட்லா ஹவுஸ் என்கவுண்டர்:தனது தவறை ஒப்புக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம்"

கருத்துரையிடுக