15 ஜூன், 2010

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு - ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 2 பேர் பற்றி தொடர்ந்து மர்மம்

ஹைதராபாத்:மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் பிரதான தீவிரவாதிகளான தேவேந்திர குப்தா மற்றும் லோகேஷ் ஷர்மா ஆகிய குற்றவாளிகளை சி.பி.ஐ மேலும் விசாரணைக்காக ஹைதரபாத் கொண்டுவரும் நிலையில், மற்ற தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி கல்சங்காராவைப் பற்றி தொடர்ந்து மர்மமாகவே உள்ளது. இவர்கள் இருவர் தான் குண்டுகளை தயார் செய்ததுள்ளதாக சி.பி.ஐ. நம்புகிறது.

சந்தீப்பை சி.பி.ஐ. எளிதில் கைது செய்யும் வாய்ப்புகள் இருந்தாலும், சுனில் ஜோஷி என்ற மற்றொரு தீவிரவாதியை சி.பி.ஐ கைது செய்வதிலிருந்து சிலரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கடந்த 2007ல் ஜும்ஆ தொழுகையின்போது ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் மார்பில் இருக்கையில் ஒழித்து வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் சுமார் 9 பேர் பலியாகினர், பலர் படுகாயம் அடைந்தனர். இக்குண்டுவெடிப்பிற்கு பிறகு சில வெடிக்காத குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இக்குண்டுவெடிப்பை கண்டித்து போராட்டம் நடத்திய அப்பாவி முஸ்லீம்களை காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி 5 பேரை கொன்றனர்.

மாநில காவல்துறையோ இக்குண்டுவெடிபிற்கு பாகிஸ்தானிய தீவிரவாதிகள் தான் காரணம் என்று கூறி சுமார் 100க்கும் மேற்பட்ட ஆந்திரா முஸ்லீம் இளைஞர்களை கைது செய்து சித்தரவதைக்குள்ளாக்கியது.

இதில் 26 இளைஞர்கள் இக்குண்டுவெடிப்பு அல்லாது பிற வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். சரியான ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் பின்னர் இவர்களை விடுவித்தது.

இவ்வழக்கு பின்னர் சி.பி.ஐ. வசம் மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா தீவிரவாத இயக்கத்தின் பின்னணியில் குப்தா, ஷர்மா, டாங்கே மற்றும் கல்சங்கரா ஆகிய தீவிரவாதிகள் இக்குண்டுவெடிப்பில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இத்தீவிரவாதிகள் தான் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரிகள் என்றும் நிரூபிக்கப்பட்டது.

வெளி வட்டாரங்களின் தகவல்களின் படி,குப்தா மற்றும் ஷர்மா இக்குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்கு முன்,ஹைதராபாத்திற்கு வாரம் இருமுறை வந்து சென்றுள்ளதாக தெரிகிறது.இவர்களுக்கு ஆந்திரா விஞ்ஞானி ஒருவர் பக்கபலமாக இருந்துள்ளார். ஆனால் ஆந்திராவிலிருந்து யாரும் இவர்களுக்கு உதவவில்லை என்று சி.பி.ஐ நம்புகிறது.

ஆனால் உள்ளூர் நபர்களின் உதவியின்றி இந்த குண்டுவெடிப்பை எப்படி நடத்தியிருக்க இயலும்? என்று ஹைதராபாத் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். Siasat

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு - ஹிந்துத்துவ தீவிரவாதிகள் 2 பேர் பற்றி தொடர்ந்து மர்மம்"

கருத்துரையிடுக