மங்களூர் விமான விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இடைக்காலமாக 14 கோடியே 6 லட்சம் ரூபாய் நிவாரண நிதியை ஏர் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூர் பாஜ்பே விமான நிலையத்தில், மே 22ம் தேதி நடந்த பயங்கர விமான விபத்தில் 166 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து மத்திய அரசும், ஏர் இந்தியா நிறுவனமும் இறந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத்தொகையை அறிவித்தன.
ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 3 கோடியே 6 லட்சம் ரூபாய் நிவாரண நிதிஅளிக்கப்பட்டது. தற்போது ஏர் இந்தியா சார்பில் 14 கோடியே 6 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் ஒருவரது குடும்பத்தினர் மட்டும் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவர்களைத் தொடர்புகொள்ள முயற்சிகள் நடந்து வருவதாகவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
0 கருத்துகள்: on "மங்களூர் விமான விபத்து - பலியானோர் குடும்பங்களுக்கு இடைக்காலமாக ரூ. 14.6 கோடி இழப்பீடு"
கருத்துரையிடுக