21 ஜூன், 2010

ஆஃகான், ஈராக் போரில் பிரிட்டனின் போர் செலவு 20 பில்லியன் யுரோ௦

லண்டன்:ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைப்படுத்தவும் மறு கட்டமைப்பு செய்வதற்கும் செலவிடப்பட்ட தொகை இருபது பில்லியன் யுரோக்களைத் தாண்டியது என பிரிட்டன் அலுவலக விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் 18 பில்லியன் யுரோ அதிகபட்சமாக இராணுவ நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு அமைச்சகத்தின் செலவில் அதிகமாகும். மேலும் நூற்றுக்கும் அதிகமான மில்லியன் பவுண்டுகள் பிரிட்டிஷ் அதிகாரிகளின் பாதுகாப்பு மற்றும் உதவிகளுக்காக செலவிடப்பட்டுள்ளது.

இந்த மொத்தத் தொகையில் இராணுவத்தில் உள்ளவர்களுக்கான அடிப்படை சம்பளம் மற்றும் அதிக காயமடைந்தவர்களுக்கான செலவுத் தொகைகள் அடங்காது.

"போருக்கான செலவு தொகைகளை மக்களின் பொதுப் பணிகளுக்கான வரிப் பணத்திலிருந்தே செலவிடப்படுகின்றது" என்று போருக்கு எதிரானவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

"இந்தப் போருக்கு செலவிடப்பட்ட தொகைகள் இங்கிலாந்தில் உள்ள மாணவர்களின் 10 ஆண்டுகளுக்கான கல்விச் செலவுகளுக்கு சமம்" என்று முன்னாள் லண்டன் மேயர் கேன் லிவிங்ஸ்டன் கூறினார்.

பிரிட்டனின் இரயில்வே துறையின் பொதுச் செயலாளர் போப் கிரவ் "ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் பெரும் பணத்தை வீணடிக்கும் போது பணத்தை எதற்கு செலவு செய்ய வேண்டும் என முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

மேலும் அவர் "நாட்டில் புதிய மருத்துவமனைகள் கட்டும் திட்டம் மற்றும் போக்குவரத்து திட்டம் போன்ற பணிகள் தொலைகாலத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள போது பில்லியன் கணக்கில் பணம் நாட்டில் இருந்து வெகு தொலைவில் மரணங்களுக்கும், அழிவுக்கும் கொட்டப்படுகிறது" என்றும் அவர் கூறினார்.

2001 ஏப்ரலிலிருந்து 2010 மார்ச் வரை இரண்டு நாடுகளின் மேல் தொடுக்கப்பட்ட போருக்காக 20.34 பில்லியன் யுரோ செலவிடப் பட்டுள்ளது. 9.24 பில்லியன் யுரோ ஈராக்கிலும் 11.1 பில்லியன் யுரோ ஆஃப்கானிஸ்தானிலும் செலவிடப்பட்டுள்ளது.இதற்கும் அதிகமாகவே செலவிடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஆஃகான், ஈராக் போரில் பிரிட்டனின் போர் செலவு 20 பில்லியன் யுரோ௦"

கருத்துரையிடுக