21 ஜூன், 2010

புனே குண்டு வெடிப்பு விசாரணை தவறானது: மஹாராஷ்டிரா டி.ஜி.பி

மும்பை புனே ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளியென குற்றம் ௦௦௦சாட்டி கைது செய்யப்பட்ட அப்துஸ் ஸமது பட்கலை மஹாராஷ்டிரா மாநில நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.

அவர் விடுதலை செய்யப்பட்ட சில மணி நேரங்களில் மஹாராஷ்டிரா மாநில டி.ஜி.பி சிவாநந்தன்,புனே ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்புத் தொடர்பான ஏ.டி.எஸ்ஸின் விசாரணை தவறானது என ஒப்புக் கொண்டார்.

2009-ம் ஆண்டில் நடந்த ஆயுதக் கடத்தல் மற்றும் புனே குண்டு வெடிப்பில் ஈடுபட்டுள்ளார் என குற்றம் சாட்டப்பட்ட ஸமதின் மீதான குற்றத்திற்க்கு உரிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரை மஹாராஷ்டிரா மாநில நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.

மஹாராஷ்டிரா டி.ஜி.பி சிவாநந்தன்,"பேக்கரி குண்டு வெடிப்பு விசாரணையில் குறைகள் உள்ளது.ஏ.டி.எஸ் அறிவியல் ரீதியில் குண்டு வெடிப்பை ஆராய்ந்து ஆதாரங்களை சேகரித்து குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ள குழுவை கண்டுபிடிக்க வேண்டும்" என பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

"முதல் தவறு அங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இராண்டாவது தவறு விசாரணை. சரியான நேரத்தில் சரியான விசாரணை வேண்டும்" என்று மேலும் அவர் தெரிவித்தார்.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த சிறிது காலத்திலேயே மங்களூர் பாஜ்பே விமான நிலையத்தில் துபாயிலிருந்து வரும்போது ஸமது கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநில ஏ.டி.எஸ்ஸால் அவர் தான் புனே குண்டு வெடிப்பின் முக்கிய குற்றவாளி என முடிவு செய்யப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குறுகிய காலத்தில் குற்றவாளியை ஏ.டி.எஸ் பிடித்துவிட்டது என புகழ்ந்தார்.

ஆனால் போலீஸ் அவரை தென் மும்பையில் நடைப்பெற்ற ஒரு ஆயுதக் கடத்தல் வழக்கில் கைது செய்திருந்தது.

ஸமதுக்கு ஜாமீன் கொடுக்கும் போது மும்பை நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக எந்த ஆதாரங்களையும் ஏ.டி.எஸ் சமர்பிக்கவில்லை.

ஸமதின் குடும்பத்தினர் புனே குண்டு வெடிப்பு வழக்கில் ஸமதுக்கு சம்பந்தம் இல்லை என்றும், குண்டு வெடிப்பு நடந்த அச்சமயத்தில் ஸமது உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் மங்களூரில் இருந்தார் என்றும் கூறி ஆதாரங்களை சமர்ப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புனே குண்டு வெடிப்பு விசாரணை தவறானது: மஹாராஷ்டிரா டி.ஜி.பி"

கருத்துரையிடுக