காந்திநகர்:2002 குஜராத் இனப் படுகொலை வழக்குகளை விசாரித்து வரும் நானாவதி - மேஹ்தா விசாரணை கமிஷன், வரும் ஜூன் 30ம் தேதி விசாரணைக்காக நரேந்திர மோடிக்கு சம்மன் அனுப்பும் என்று தெரிகிறது.
எனினும், இவ்விவகாரத்தில் குஜராத் அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் கடிதம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது வரும் 30ம் தேதி நீதிபதிகள் எஸ்.ஜே.முக்ஹோபத்யா மற்றும் அகில் குரேஷி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட உள்ளது. இதற்குப் பிறகு நானாவதி கமிஷன் எப்போது மோடியை விசாரிக்கும் என்று தெரியவரும்.
ஜன சந்கார்ஷ் மன்ஞ்ச் அமைப்பின் தலைவர் முகுல் சின்ஹா குஜராத் அரசின் இந்நடவடிக்கைகள் வழக்கை தாமத்தப்படுத்தும் செயல் என்று முறையிட்டுள்ளார். ஆனாலும் நானாவதி கமிஷன் தன் சம்மன் தேதியை அறிவித்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இவ்வமைப்புதான் நானாவதி கமிஷனுக்கெதிராக மனு ஒன்றை குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மூன்று வருடங்களாக நானாவதி கமிஷன் மோடியை விசாரிப்பதிலிருந்து காலம் தாழ்த்தி வருவதாக அம்மனுவில் குற்றம் சாட்டப்பட்டது.
மோடி மட்டும்மல்லாமல் அமைச்சர்கள், மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட ஆறு குற்றவாளிகளையும் நானாவதி கமிஷன் விசாரிக்க சம்மன் அனுப்ப வேண்டும் என்றும் மன்ஞ்ச் அம்மனுவில் கேட்டுக்கொண்டுள்ளது.
Twocircles
0 கருத்துகள்: on "நானாவதி கமிஷன்: மோடிக்கு ஜூன் 30ம் தேதி சம்மன்?"
கருத்துரையிடுக