அங்காரா:இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலுக்குப் பிறகு துருக்கி அரசு இஸ்ரேலிய இராணுவத்திற்கு எதிராக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவ விமானங்கள் துருக்கியின் மேல் பறக்கும்முன் அனுமதி பெறவேண்டும் என்றும், மேலும் இஸ்ரேலிய இராணுவத்துக்கு வான் எல்லையை மூடப்போவதாகவும் அந்நாட்டு செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
காஸ்ஸாவிற்கான உதவிப்பொருட்கள் ஏந்திய ஃப்ரீடம் ஃப்ளோடில்லா என்ற துருக்கியின் கப்பலை தாக்கியபின் இஸ்ரேலுக்கு வான் எல்லையை துருக்கி மூடியிருக்கிறது என்று துருக்கி பிரதமர் ஜி 20 மாநாட்டிற்கு பிறகு தெரிவித்தார்.
இஸ்ரேலிய இராணுவ விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை பற்றி முழுவிவரம் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பொது விமானங்களுக்கு தடையேதும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
போலந்து நாட்டுக்கு 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய அதிகாரிகளை சுமந்து சென்ற இராணுவ விமானத்திற்கு துருக்கிய வான்பரப்பில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இதனால் அவ்விமானம் வேறு வழியில் செல்ல நேர்ந்தது என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுடனான வர்த்தக மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை குறைந்த அளவுக்கே வைத்துக்கொள்ளப் போவதாகவும் துருக்கி அறிவித்துள்ளது.
presstv
0 கருத்துகள்: on "இஸ்ரேலிய இராணுவத்துக்கு வான் எல்லையை மூடும் துருக்கி"
கருத்துரையிடுக