ஆஃப்கனில் தாலிபான்களுக்கெதிராக நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போர் எதிர்பார்த்ததை விட கடினமாகவும், மெதுவாகவும் சென்றுக்கொண்டிருப்பதாக சி.ஐ.ஏ. டைரக்டர் லான் பநேட்டா ஒப்புக் கொண்டுள்ளார்.
யு.எஸ். மற்றும் நேட்டோ படைகளுக்கான தலைவர் ஜெனரல் ஸ்டான்லி மெக்கிறிஸ்டலின் மாற்றப்பட்டு ஒரு வாரக்காலம் கூட ஆகாத நிலையில், வெளிநாட்டுப் படைகளின் மேல் தாலிபான்களின் தாக்குதல் அதிகரித்த வண்ணம் உள்ளதாக அவர் அச்சம் தெரிவித்தார்.
'தாலிபான்கள் தற்போது வன்முறைகளில் இறங்கியுள்ளனர். அவர்களிடம் நவீன ஆயுதங்களும் கிட்டியுள்ளது. எங்கள் படைகளுக்கெதிராக அவர்கள் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர், அதில் எந்த சந்தேகமும் கிடையாது' என்றும் லான் மேலும் தெரிவித்தார்.
ஏ.பி.சி. தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ஆப்கான் போர் தற்போது கடினமாக உள்ளதாகவும், யாரும் எதிர்பாக்காத அளவிற்கு இந்த ஒன்பது வருடப் போர் மெதுவாக சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன் ஆஃப்கானில் தாலிபான்கள் தாக்கியதில் 2 யு.எஸ்.படைவீரர்கள் உயிரிழந்தது, 6 வீரர்கள் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து, சி.ஐ.ஏ. தலைவரின் இப்பேட்டி வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இல்லாத அளவிற்கு இந்த ஜூன் மாதம் மட்டும் சுமார் 92 வெளிநாட்டுப் படைவீரர்கள் உயிரிழந்துள்ளது, ஆஃப்கானில் தாலிபான்களின் சக்தி மேலோங்குவதை பிரதிபலிக்கின்றது.
காந்தஹார், காபூல் உட்பட பல இடங்களை தாலிபான்கள் கைப்பற்றி வருவது மீடியாக்களின் கவனத்திற்கு எட்டவில்லை என்றாலும் தாலிபான்களின் தற்போதைய ஆதிக்கம், நேட்டோ படைகளின் தோல்வி மற்றும் மெக்ஸிகோ மாகாணத்தில் பல சேதங்களை இழைத்த எண்ணைக் கசிவு ஆகிய சம்பவங்கள் 'ஆப்கான் புதையல்' என்ற ஒரு வதந்தி மூலம் யு.எஸ்ஸை காப்பாற்றுவதற்கு தோதுவாக அமைந்துவிட்டது.
presstv
0 கருத்துகள்: on "ஆஃப்கான் போர் எதிர்பார்த்ததை விட கடினமாக உள்ளதாக சி.ஐ.ஏ தலைவர் ஒப்புதல்"
கருத்துரையிடுக