4 ஜூன், 2010

மேற்குவங்கம்:நகராட்சித் தேர்தலில் முஸ்லிம்களின் செல்வாக்கு சரிவு- வெறும் 31 வார்டுகளில் மட்டுமே வெற்றி

கொல்கத்தா:அண்மையில் மேற்குவங்கத்தில் நடந்த தேர்தல்களில், முஸ்லீம்கள் அதிகம் வாழும் இடங்கள் என்று கருதப்படும் மால்டா மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய நகரங்களில், மொத்துமுள்ள 146 வார்டுகளில் வேறும் 31 வார்டுகளை மட்டுமே முஸ்லீம்கள் வென்றுள்ளனர்.

இதன் மூலம்,மேற்குவங்க நகராட்சிகளில் முஸ்லீம்களின் செல்வாக்கு குறைந்துள்ளது.

மால்டா நகராட்சியில் இங்கிலீஷ் பஜார்,ஓல்ட் மால்டா என 2 நகராட்சிகளுள்ன. இங்கிலீஷ் பாஜாரில் சுமார் 25 வார்டுகளும், ஓல்ட் மல்டாவில் சுமார் 18 வர்டுகளும் என மொத்தம் 43 வார்டுகள் உள்ள மால்டாவில், முஸ்லீம்கள் வென்ற வார்டுகளோ வேறும் 2 தான்.

முர்ஷிதாபத்தை பொறுத்த வரையில், இங்கு சுமார் 7 நகரட்சிகளுள்ளன. 6 நகராட்சிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 103 வார்டுகளுள்ளன. இதில் முஸ்லீம்கள் வெற்றிபெற்றது என்று பார்த்தால் வேறும் 29 மட்டுமே.
மீதியுள்ள சுமார் 115 வார்டுகளை காங்கிரசும், இடது சாரிகளும் சரி பாதியாக வென்றுள்ளன.

இத்தேர்தலில் அருதி பெரும்பான்மை பெற்ற திரிணாமுல் காங்கிரசோ, முஸ்லீம்கள் வாழும் இவ்விடங்களில் ஒரு வார்டை கூட பிடிக்கவில்லை.

முஸ்லீம்களின் இத்தோல்விக்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று, சரியான நம்பிக்கையான முஸ்லீம் வேட்பாளர்களை பெரிய கட்சிகள் நிறுத்தாது மற்றொன்று முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில், இரண்டிற்கும் மேற்பட்ட முஸ்லீம்களை நிறுத்தி, முஸ்லீம்களின் ஓட்டுக்களை சிதறடிக்கப்பட்டுள்ளது இதன் மூலம்,மாற்றார்கள் அதிக இடங்களில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்குவங்கத்தில் சுமார் 26% முஸ்லீம்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மேற்குவங்கம்:நகராட்சித் தேர்தலில் முஸ்லிம்களின் செல்வாக்கு சரிவு- வெறும் 31 வார்டுகளில் மட்டுமே வெற்றி"

கருத்துரையிடுக