ஓர் இராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் 3 ஆஸ்திரேலிய கமாண்டோக்களும் ஒரு அமெரிக்க சேவை உறுப்பினரும் உயிரழந்தனர் என்று நேட்டோ அரிவித்துள்ளது.
அதிகாலை வேளையில் தெற்கு ஆஃப்கனில் தேடுதல் வேட்டைக்கு செல்லும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 20ம் தேதி அன்று வேறு இரு சர்வேதசப் படையினர் வெவ்வேறு குண்டுவெடிப்புகளில் தெற்கு ஆஃப்கனில் கொல்லபட்டனர் என்று நேட்டோ அறிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெளிவாக்கப்படவில்லை.
அந்த ஹெலிகாப்டரை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக தாலிபான் கூறியது. ஆனால் அப்படி எதுவும் தெரியவில்லை என்று நேட்டோ மறுத்துள்ளது.
இச்சம்பவத்தில் ஏழு ஆஸ்திரேலிய வீரர்கள் காயமுற்றுள்ளனர்.இது ஆஸ்திரேலியாவுக்கு கெட்ட நாள் என்று ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட் பாராளுமன்றத்தில் கூறினார்.
ஆஃப்கனிஸ்தானிலிருந்து படைகளை வாபஸ் பெறும்படி இங்கிலாந்தில் அழுத்தம் அதிகரித்து வருவது போல் ஆஸ்திரேலியாவிலும் அழுத்தம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்: on "ஆஃப்கனில் 4 நேட்டோ படையினர் பலி"
கருத்துரையிடுக