முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான திக்விஜய் சிங் மாரடைப்பால் காலமானார்.
முன்னாள் பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான அரசில் வெளியுறவு, ரயில்வே போன்ற துறைகளில் இணை அமைச்சராக இருந்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலம் பாங்கா தொகுதியில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். 1999ம் ஆண்டு முதல் இந்தியன் ரைபில் அசோசியேஷன் தலைவராகவும் இருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்தில் நடக்கும் துப்பாக்கிச் சுடும் போட்டிக்காக சென்ற வீரர்களுடன் சிங்கும் லண்டன் சென்றார்.
லண்டனில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அவருடைய மூளையில் ரத்தக் கசிவு இருப்பது தெரிய வந்ததும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

0 கருத்துகள்: on "முன்னாள் மத்திய அமைச்சர் திக்விஜய் சிங் மரணம்"
கருத்துரையிடுக