
சவூதி அரேபியாவில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஆய்வறிக்கையின் படி, அந்நாட்டில் 60 லட்சம் பேர் புகைப் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும், புகையிலை மற்றும் சிகரெட் நுகர்வில் சவூதி அரேபியா உலகிலேயே ஆறாவது இடத்தில் உள்ளது. 10 சதவீத பெண்கள் மற்றும் 19.3 சதவீத இளைஞர்கள் சிகரெட் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆண்டுக்கு 1.3 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் அங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. மாதந்தோறும் புகைப் பழக்கம் தொடர்பான நோய்களால் 400 பேர் வரை இறப்பதாகவும் தெரியவந்துள்ளது.
புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த 2003ம் ஆண்டு அந்நாட்டு அரசு, கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. இந்த கட்டுப்பாடுகளை புகைப் பிடிப்பவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே, பெருகி வரும் சிகரெட் பழக்கத்தை கட்டுப்படுத்த சவூதி அரசு மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதன் ஒருகட்டமாக விமான நிலையங்களில் புகைப் பிடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்ற 150 உறுப்பினர்களை கொண்ட ஷுரா கவுன்சிலின் பரிந்துரைக்கு, அந்நாட்டு இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும்,தடையை மீறி புகைப் பிடிப்பவர்களுக்கு விமான போக்குவரத்து ஆணையம் அபராதம் விதிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
0 கருத்துகள்: on "சவூதி:விமான நிலையங்களில் புகைப் பிடிக்க தடை"
கருத்துரையிடுக