25 ஜூன், 2010

அமெரிக்காவின் ப்ளாக் (தடை) லிஸ்டிலிருந்து இஸ்ரோவை நீக்க இந்தியா கெஞ்சல்

அமெரிக்காவின் ப்ளாக் (தடை) லிஸ்டிலிருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி அமைப்பான டி.ஆர்.டி.ஓ. ஆகியவற்றின் பெயர்களை நீக்க வேண்டும் என்று அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

1998ம் ஆண்டு பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதையடுத்து இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அமைப்புகளுக்கு அமெரிக்க தடை விதித்தது.

இதனால் இவற்றுக்கு அமெரிக்கா வழங்கி வந்த தொழில்நுட்ப உதவிகள் நிறுத்தப்பட்டன.

இந் நிலையில் அமெரிக்கா சென்றுள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையிலான உயர் நிலைக் குழு,தடை பட்டியலிலிருந்து இந்திய நி஋உவன் அமைப்புகளின் பெயர்களை நீக்க வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுக் குறித்து வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசிய ஆனந்த் சர்மா, தடை பட்டியலில் இருந்து இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ. அமைப்புகளின் பெயர்களை நீக்குவதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்புத்துறையில் முதலீடு செய்யவும் அமெரிக்க நிறுவனங்கள் முன்வர வேண்டும்" என்றும்.
மேலும் பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீடுகளை வரவேற்பதில் இந்தியா திறந்த மனதுடன் உள்ளது. இந்நிலையில் தடை பட்டியலில் இந்த நிறுவனங்களின் பெயர்கள் இருப்பது அர்த்தமுள்ளதாக இருக்காது" என்றும் தெரிவித்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அமெரிக்காவின் ப்ளாக் (தடை) லிஸ்டிலிருந்து இஸ்ரோவை நீக்க இந்தியா கெஞ்சல்"

கருத்துரையிடுக