25 ஜூன், 2010

காஸ்ஸாவின் இருதய நோயாளிகளூக்கு கத்தார் செம்பிறை உதவி

இருதய நோயாளிகளுக்கு சிச்சை அளிப்பதற்காக இன்னும் இரண்டு இருதய மருத்துவர்களை கத்தார் செம்பிறை (Red cresent) அமைப்பு காஸ்ஸாவுக்கு அனுப்பியுள்ளது.

இஸ்ரேலின் அரக்கத்தனமான தடை காரணமாக காஸ்ஸா மக்கள் வெளியே சென்று நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாத கொடுமை உள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு கத்தார் செம்பிறை அமைப்பு இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

செம்பிறையின் ஒரு மருத்துவக் குழு ஏற்கனவே காஸ்ஸா சென்று அல் ஷிஃபா மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிச்சை அளித்து வருகின்றது. அவர்களுடன் இந்த இரு மருத்துவர்களும் சேர்ந்து சிச்சை அளிப்பார்கள் என்று செம்பிறை அறிவித்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காஸ்ஸாவின் இருதய நோயாளிகளூக்கு கத்தார் செம்பிறை உதவி"

கருத்துரையிடுக