காந்தஹார்:ஆப்கானில் காந்தஹார் மாகாணத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் குண்டுவெடித்து 40 பேர் மரணமடைந்தனர். 70க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டது.
குண்டுவெடிப்பிற்கு என்ன காரணம் என்பது தெளிவாகவில்லை. திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வந்த ஆண்கள் தங்கியிருந்த இடத்தில் குண்டுவெடித்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட விருந்தினர்கள் உள்ளூர் போலீஸ் மற்றும் ராணுவத்தைச் சார்ந்தவர்கள் என ஒரு போலீஸ் அதிகாரி தெரிவிக்கிறார்.
இந்தக் குண்டுவெடிப்பு மிருகத்தனமானது எனவும் இதற்கு தாங்கள் பொறுப்பல்ல எனவும் தாலிபான் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "ஆஃப்கனில் திருமண நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு: 40 பேர் மரணம், நாங்கள் காரணமல்ல- தாலிபான்"
கருத்துரையிடுக