10 ஜூன், 2010

தினமணியின் கோணல் கொண்ட பார்வை!!

இஸ்லாத்தின் மீதான வெறுப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு, முஸ்லிம்களை கருவறுப்பதைத் தன் பிரதான லட்சியமாக கொண்டு இயங்கி வரும் இந்துத்துவ ஃபாஸிஸத்துக்கு அரசியல், அதிகார, பொருளாதார, சட்ட, சமூக பின்புலம் உறுதியாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது இன்று நாட்டில் அனைவருக்கும் வெட்டவெளிச்சமாகியுள்ள விஷயமே.

எந்த ஒரு மதத்தையோ,இனத்தையோ சாராமல் மதச்சார்பற்ற கொள்கையில் தனித்துவத்துடன் இயங்கும் இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பு சீர் குலைந்து விடாமல் தாங்கி நிற்பதில் ஆறாவது தூணாக ஊடகம் முக்கிய பங்கு வகிக்கிறது.அந்த ஊடகத்துறையையும் இந்துத்துவ பாசிச பயங்கரவாதிகள் விட்டு வைக்காமல், அதனுள் மிக ஆழமாக ஊடுருவியுள்ளனர் என்பதும் நாட்டு மக்கள் அறிந்த விஷயம் தான்.

அரசியல், சமூகம், பொருளாதாரம், அதிகாரம், கல்வி என அனைத்து விஷயங்களிலும் மிக மோசமான அளவில் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமூகம், இன்றைய உலகின் அதிக சக்தி வாய்ந்த ஆயுதமான ஊடகத்துறையில் ஒரு சாண் அளவுக்குக் கூட அடி எடுத்து வைக்காதது பரிதாபமான விஷயமே!

முஸ்லிம்களை அடியோடு அழிப்பதற்காக அனைத்து வகைகளிலும் சூழ்ச்சி செய்து இயங்கி வரும் இந்துத்துவ பாசிசத்திற்கு, பார்ப்பனீய அடித்தளம் கொண்டப் பல ஊடகங்கள் கருத்தாக்க அடிப்படையில் மிக பலமான உதவியினைச் செய்து வருகின்றன. அதில், தமிழகத்தில் தினமலர் நாளிதழ் முதலிடம் வகிக்கிறது. ஆனால், தினமலர் நாளிதழின் வஞ்சக எழுத்தைப் புரிந்து கொண்டுள்ள அளவுக்கு, நடுநிலை வேடம் போட்டுத் திரியும் மற்று சில ஊடகங்களை முஸ்லிம்கள் இதுவரை சரிவர புரிந்து கொள்ளாதது ஆச்சரியகரமானது!

நேரடியான எதிரியை விட,நடுநிலை வேடம் அணிந்து உள்ளேயே சுதந்திரமாக உலாவரும் துரோகி தான் அதிக அபாயம் நிறைந்தவன் என்பதையும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் மிகச் சரியாக முதுகில் குத்தி எழுந்திருக்கவே விடமால் முதுகெலும்பையே முறித்து விடும் அளவுக்கு மோசமானவன் என்பதையும் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குஜராத்,கோவை போன்ற இடங்களில் இரத்தவெறி பிடித்தவர்கள் நடத்திய இன அழிப்பு கலவரங்களின் போது, சமையலறை வரை சகஜமாக புழங்கும் அளவுக்கு நெருக்கமாக இருந்த பக்கத்து வீட்டு இந்து பாசிச வெறியர்கள் முஸ்லிம் சமூக பெண்களைக் கடித்துக் குதறிய சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்துக்குச் சரியான பாடத்தை ஏற்படுத்தித் தந்திருக்க வேண்டும்.

அந்த வகையில்,தரமான, நடுநிலை ஊடகம் என்ற பெயரை முஸ்லிம்கள் மத்தியிலேயே பெற்றுள்ள, பார்ப்பனீய அடித்தளம் கொண்ட தினமணியின் வஞ்சகத்தையும் அதன் பயங்கரவாத எழுத்துக்களையும் முஸ்லிம்கள் கவனமாக ஆராய வேண்டிய காலம் கனிந்து விட்டது.

இன்று தமிழகத்தில் மற்றெல்லா சமூகங்களை விட, முஸ்லிம் சமூகத்திலேயே சமூக மேம்பாட்டுக்காக உழைப்பதற்காக பல அமைப்புகள் உருவாகியுள்ளன. ஆனால், அத்தகைய அமைப்புகளில் கூட, ஒரு பக்க பேட்டி, ரம்ஜான் மலர் போன்ற தினமணியின் குள்ளநரித்தனத்துக்கு மயங்கி நிற்கும் நிலையே மிகைத்து காணப்படுகிறது.

பார்ப்பனீயத்தின் குடுமியை எவ்வளவு தான் மறைத்து வைத்தாலும் அதனை இனம் கண்டு கொள்வதில் இன்று பகுத்தறிவுவாதிகளே முன்னிலையில் உள்ளனர்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முசுலிம்கள் ஆழமாக மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்; "எல்லா பார்ப்பனீயர்களும் பயங்கரவாதிகள் அல்ல; ஆனால், எல்லா பயங்கரவாதிகளும் பார்ப்பனீயத்தால் நீரூற்றி, உரமிட்டு வளர்க்கப்படுபவர்களே!".

இனி விஷயத்துக்கு வருவோம்.

முஸ்லிம்களை அழித்தொழிக்க நீண்டகால திட்டத்துடன் செயல்படும் இந்துத்துவ பாசிசத்தின் சதித் திட்டங்களில், 'தீவிரவாதி' என்று கேட்டாலே அது முஸ்லிம்கள் தான் என்றொரு கருத்தாக்கம் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட வேண்டும்" என்பது முக்கியமான ஒன்று.

இந்தச் சதி திட்டத்தின் பல்வேறு முகங்கள் தான், 'மாலேகோன், தென்காசி, ஹைதராபாத், அஜ்மீர், கோவா' போன்ற, இன்று உண்மை வெளியாகியுள்ள, ஆரம்பத்தில் முஸ்லிம்கள் மீது பழி சுமத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களும் இன்னும் உண்மைகள் வெளிவராத எண்ணற்ற பல பயங்கரவாத செயல்களும் ஆகும்.

நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்பு பயங்கரவாதங்களின் பின்னணியில், நிழலுலகில் இயங்கி வரும் 'இந்துத்துவ ஃபாஸிஸ பயங்கரவாத அரசாங்கம்' தான் செயல்படுகிறது என்பது இன்று கிட்டத்தட்ட வெட்ட வெளிச்சமாகி விட்ட சூழலிலும் கூட, நடுநிலை ஊடக வேடமிட்டு திரியும் தினமணி, தன் ஊடக பயங்கரவாதத்தை இந்த நிழலுலக இந்துத்துவ பயங்கரவாத கூட்டத்துக்குச் சாதகமாக முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக பயன்படுத்தி வருவதிலிருந்து, தினமணியிடம் வேரூன்றி போயுள்ள பார்ப்பனீய பயங்கரவாத முஸ்லிம் எதிர்ப்பு வெறியின் அளவினைப் புரிந்து கொள்ள இயலும்.

வரலாற்று நினைவுச் சின்னமான பாபரி மஸ்ஜித், இந்துத்துவ பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பின்னர், கடந்த 20 ஆண்டு காலத்தில் இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியினையும் அதில் ஈடுபட்ட சக்திகளையும் ஆராய்ந்து பார்த்தால்,இந்துத்துவ பாசிசத்தின் அதிகார, இரத்தவெறி அவற்றினுள் அடங்கியிருப்பதைக் கண்டுகொள்ள முடியும்.

பாசிச பயங்கரவாதத்துக்குப் பலி கொடுக்கப்பட்ட கர்கரே என்ற வீரர் ஒருவர் இல்லாமல் போயிருந்தால், இன்று கூட ஒருவேளை இந்துத்துவ பாசிசத்தின் பயங்கரவாத முகம் மக்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கும். ஆனால் நாட்டில் இன்று நிலைமை அப்படியல்ல. குண்டுவெடிப்பு பயங்கரவாதங்களின் பின்னணியிலும் திட்டமிட்ட கலவரங்களின் பின்னணியிலும் இந்துத்துவ பாசிசத்தின் ஆக்டோபஸ் கரங்கள் பரவியிருப்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.

இருப்பினும்,இந்துத்துவ வெறிக்குத் தூபம் போடும் வகையில் அதன் சித்தாந்தத்தையும் முஸ்லிம் எதிர்ப்பு வெறியையும் இந்துத்துவ ஊதுகுழலாக மாறி அவ்வபோது தினமணி வெளிப்படுத்தி வருகிறது.

அதன் சமீபத்திய உதாரணங்களில் ஒன்றைப் பார்ப்போம்:

"துபையில் இருந்து மங்களூர் வந்த தீவிரவாதி கைது"
இது கடந்த மே மாதம் 25 ஆம் தேதி தினமணியில் வந்த ஒரு செய்தியின் தலைப்பு.

தலைப்பை பார்த்த உடன், "அரபு நாடான துபையிலிருந்து மங்களூருக்கு வந்த ஒரு தீவிரவாதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்" என்று தினமணி கூற வருவதாக புரிந்து கொள்ள முடியும்.

செய்தியின் உள்ளடக்கம், "புனேயிலுள்ள ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில், தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியவர்களில் ஒருவர் என காவல்துறை சந்தேகிக்கும் அப்துல் சமத் பத்கல் என்பவரை, அவர் துபையிலிருந்து மங்களூர் வந்த போது விமானநிலையத்தில் கைது செய்தனர்" என்பது தான்.

இதில் என்ன தவறு உள்ளது? குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளி என காவல்துறை சந்தேப்படுபவர்களைத் தீவிரவாதி என்று கூறாமல் அப்பாவி என்றா கூறுவது? என கேள்வி எழுப்புபவர்கள், சற்று பொறுமையுடன் தொடர்ந்து படியுங்கள்.

கடந்த 20 ஆண்டு காலமாக நாட்டில் அதிகமாக குண்டுகள் வெடிப்பதும் குண்டுவெடிப்பு சப்தம் அடங்குவதற்குள்ளேயே அது ஏதாவது ஒரு முஸ்லிம் பெயர் கொண்ட அமைப்புகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு, "முசுலிம் தீவிரவாதிகளின் பயங்கரவாதம்" என ஊடகங்களில் தலைப்பு செய்தியாவதும் சர்வசாதாரணமாக நடந்து வரும் சம்பவம் தான். ஆனால், அவற்றின் பின்னால் இந்துத்துவத்தின் பயங்கரவாத முகம் இருந்துள்ள உண்மை வெளியான பின், முன்பு அவ்வழக்குகளில் ஜோடிக்கப்பட்டு தீவிரவாதிகளாக்கப்பட்டிருந்த அப்பாவி முசுலிம்களின் பரிதாபகரமான நிலையினைக் குறித்து ஒரு வரி கூட அந்த ஊடகங்கள் எழுதாததும் கவனிக்க வேண்டும்.

நாட்டில் நடக்கும் பயங்கரவாதங்களின் பின்னணியில் காவல்துறை யாரையாவது கைது செய்யும் போது, அவர் மீதான குற்றம் தெளிவிக்கப்படும் வரை அவரைக் குற்றவாளியாக கருத முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டமே அவ்வாறு கூறும் போது, குண்டுவெடிப்புகளில் குற்றம்சாட்டப்படும் முஸ்லிம்களை மட்டும் அடுத்த நொடியே "தீவிரவாதியாக" பத்திரிக்கைகள் தீர்ப்பு எழுதி விடுவது எவ்வகையான பயங்கரவாதம் என்பதை சட்டம் தான் சொல்லித் தர வேண்டும்.

அஜ்மீர் குண்டுவெடிப்பு முதல், மாலேகான் குண்டுவெடிப்பு வரை அவை நடந்து முடிந்த முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்கள் அவற்றில் தொடர்புபடுத்தப்பட்டு,அவர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அவற்றின் பின்னணியில் இந்துத்துவ பயங்கரவாதிகள் தான் செயல்பட்டிருந்தனர் என்பது இன்று வெட்ட வெளிச்சமாகி விட்ட நிலையில், முன்னர் தீவிரவாதியாக்கப்பட்டிருந்த அந்த அப்பாவி முஸ்லிம்களின் கதியினைக் குறித்து யாராவது சிந்தித்ததுண்டா?

அதே போன்ற சூழல்,இன்று ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் தொடர்புபடுத்தப்பட்டுள்ள இந்த அப்துஸ்ஸமத் பத்கலுக்கும் ஏற்படலாம். நாளையே இவர் நிரபராதி என விடுவிக்கப்பட்டால், இன்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அவர் குறித்து தீய கருத்தாக்கத்தை உருவாக்கும் வகையில் செய்தி வெளியிட்டுள்ள பாசிச தினமணி, என்ன பரிகாரம் செய்யும்?

ஊடக தர்மத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் கேலி செய்யும் வகையில் இவ்வகையில் செய்தி வெளியிட்டுள்ள இந்தத் தினமணி, அதே சமயம் இந்துத்துவ பாசிச பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள மற்ற சில குண்டுவெடிப்பு செய்திகளை எவ்வாறு வெளியிட்டுள்ளது என்பதைப் பார்க்க வேண்டாமா? கீழே படியுங்கள்!

கோவா குண்டுவெடிப்பு: இருவர் கைது
2009 அக்டோபர் 16 அன்று கோவாவில் இருவர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் குறித்து தினமணி வெளியிட்டுள்ள செய்தி தலைப்பு இது. செய்தியின் உள்ளடக்கத்தில், "சனாதன் சவுன்ஸ்தா என்னும் அமைப்பைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்" என்று தினமணி கூறுகிறது.

"சனாதன் சன்ஸ்தா" என்ற இந்துத்துவ அமைப்பினைச் சேர்ந்தவர்களைக் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்தால்,அது தினமணிக்குச் சாதாரணமான "இருவர் கைது" விஷயமாகிறது.
இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக, கடந்த மே 9 அன்று தினமணி கீழ்கண்ட தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.

கோவா குண்டுவெடிப்பு: 17-ல் குற்றப்பத்திரிகை தாக்கல்
இதன் உள்ளடக்கத்தில், "இந்த வழக்கு தொடர்பாக தனஞ்செய் அஷ்டேக்கர், திலீப் மங்கோனர், வினாயக் பாட்டீல், வினய் தலேக்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 180 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால் வினாயக் பாட்டீல், வினய் தலேக்கர் ஆகியோருக்கு வாஸ்கோவிலுள்ள பெருநகர குற்றவியல் நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமீன் வழங்கியது" என்று கூறுகிறது.

அத்துடன்,"இந்த வழக்கில் சனதான் சன்ஸ்தா என்ற அமைப்பு சம்பந்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்" என்றும் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இவ்வழக்கில் "குற்றம் சாட்டப்பட்டவர்கள்" என்று, தெளிவாக அவர்கள் மீது அப்பாவி தோற்றத்தை ஏற்படுத்தி இந்துத்துவ பயங்கரவாதிகளுக்குச் சார்பாக ஊதுகிறது.

அதே போன்று, அஜ்மீர் தர்காவில் 2007 ஆம் ஆண்டு இந்துத்துவ பயங்கராவதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலில் அவர்களின் சதி திட்டத்தின் படி, எப்போதும் போல் முஸ்லிம்களே தீவிரவாதிகள் என கைது செய்யப்பட்டனர்.

மூன்று ஆண்டுகளாக, தீவிரவாதத்தின் முள் முனையில் முஸ்லிம் சமூகம் நிறுத்தப்பட்டிருந்தது, ஆனால், அஜ்மீர் குண்டுவெடிப்பும் அது முசுலிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டதும் இந்துத்துவ பாசிசத்தின் சதி திட்டப்படி தான் என்பது இவ்வாண்டு வெளியானது.

அஜ்மீர் குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் முசுலிம்களல்ல; இந்துத்துவ பயங்கரவாதிகள் தான் என்பது வெளியானதோடு, அஜ்மீர் தர்காவில் குண்டுவைத்து விட்டு முஸ்லிம்கள் மீது திருப்பி விட்டவர்கள் என்று காவல்துறை சில இந்துத்துவ பயங்கரவாதிகளை கைது செய்தது.

அதனைக் குறித்து இந்த இந்துத்துவ ஃபாஸிஸத்தின் ஊதுகுழல் தினமணி வெளியிட்ட செய்திகளைக் கவனியுங்கள்:
மே மாதம் 2 ஆம் தேதி வெளியான ஒரு செய்தி:

அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த அனுமதி கோருகிறது காவல்துறை
3 ஆண்டுகாலமாக தாங்கள் செய்த பயங்கரவாத செயல்களை முஸ்லிம்கள் மீது சுமத்தி விட்டு, உல்லாசமாக சுற்றித் திரிந்த இந்தப் பயங்கரவாதிகள், “நேர்கொண்ட பார்வை” என தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளும் பாசிச தினமணிக்கு, இந்து "தீவிரவாதிகள்" இல்லையாம்; வெறும் "குண்டுவெடிப்பு வழக்கில் கைதானவர்களாம்"!. இது தான் பாசிச தினமணியின் “நேர்கொண்ட பார்வை” போலும்!

செய்தியின் உள்ளடக்கத்தில் ஃபாஸிஸ தினமணி இவ்வாறு கூறுகிறது:
"அஜ்மீர் குண்டுவெடிப்பில் அஜ்மீரில் உள்ள பிகார்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தேவேந்திர குப்தா, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர், விஷ்ணு பதிதார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குப்தா, சந்திரசேகர் ஆகியோர் போலீஸ் காவலில் உள்ளனர். இருவரிடம் பயங்கரவாத எதிர்ப்புபோலீஸ் பிரிவு விசாரணை நடத்திவருகிறது.

சனிக்கிழமை கைதான பதிதாரும் விசாரணைக்காக அஜ்மீருக்கு அழைத்து வரப்படுகிறார்.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கருதப்படும் இந்து அமைப்பான அபினவ் பாரத் என்ற அமைப்புடன் குப்தா தொடர்புடையவர் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மலேகான் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பெண் துறவி பிராக்யா சிங் தாக்குருடன் குப்தா தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டு மெய்யானதா என்பதை போலீஸார் விசாரிக்கின்றனர்".

குண்டுவெடிப்புகளில் காவல்துறையால் சந்தேகத்தில் கைது செய்யப்படுபவர் முசுலிமாக இருந்தால், "தீவிரவாதியாகவும்", "அவன், இவன்" என ஏக வசனத்திலும் எழுதும் தினமணியின் எழுத்து தீவிரவாதம், அதுவே இந்துத்துவ பயங்கரவாதிகளாக இருந்தால் "அவர், இவர்" என்றும் "குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுபவர்" என்றும் மாறி விடுவதன் ரகசியம் பார்ப்பனீய குடுமி மூளைகளுக்கே வெளிச்சம்!

மே மாதம் 3 ஆம் தேதி வெளியான அதே செய்தியின் தொடர்ச்சி:
தர்காவில் குண்டு வெடித்த சம்பவம்:தேவேந்திர குப்தாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை
இதன் உள்ளடக்கத்தில், "அஜ்மீரில் 2007-ம் ஆண்டு தர்கா ஒன்றில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தேவேந்திரா குப்தாவை நார்கோ அனாலிசிஸ் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனைக்கு உள்படுத்த அஜ்மீர் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள தர்கா ஒன்றில் 2007-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் தேவேந்திர குப்தா என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார்" என தினமணி தேவேந்திர குப்தா என்ற பயங்கரவாதியை "வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுபவர்" என எழுதுகிறது.

இதன் தொடர்ச்சியாக மே மாதம் 5 ஆம் தேதி தினமணி வெளியிட்ட செய்தி:
உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:உண்மை கண்டறியும் சோதனை சட்டவிரோதமானது

"நார்கோ அனாலிஸிஸ் சோதனை முடிவை ஆதாரமாக ஏற்க முடியாது" என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு செய்தியின் கீழே பாசிசதிற்குத் துணைபோகும் தினமணி இறுதி சேர்க்கையாக இணைத்துள்ள ஒரு விஷம வரி:
"அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு சம்பவ குற்றவாளியான தேவேந்திர குப்தாவிடம் நார்கோ அனாலசிஸ் சோதனை செய்ய கடந்த 3-ம் தேதி ராஜஸ்தான் நீதிமன்றம் அனுமதி அளித்தது."

"அஜ்மீர் தர்ஹா குண்டுவெடிப்பு சம்பவ குற்றவாளியாம்". அது என்ன? குண்டுவெடிப்பில் தொடர்புடையாக கைது செய்யப்படுபவர் முஸ்லிம் பெயரிலுள்ளவர் எனில், அவர் "தீவிரவாதி",அதுவே இந்துத்துவ பயங்கரவாதியாக இருந்தால் மட்டும் அவர்,"சந்தேகிக்கப்படுபவர்", "குற்றவாளி", "தொடர்புடையவர்" போன்ற பதங்கள்? பார்ப்பனீய பயங்கரவாத மூளையின் அயோக்கியத்தனத்தை எதனால் அடிக்க வேண்டும்?!

குண்டுவெடிப்புகளில் தாமதமாகவேனும் கைது செய்யப்படும் இந்துத்துவ பயங்கரவாதிகளை ஒரு இடத்தில் மறந்து கூட "தீவிரவாதி" என்றோ "பயங்கரவாதி" என்றோ கூறிவிடாத பாசிச ஊதுகுழல் தினமணி, ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள அப்துஸ்ஸமத் பத்கல்" குறித்த தொடர் செய்தி ஒன்றைக் கடந்த மே 27 ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளது. அதன் தலைப்பு இப்படி:

மங்களூரில் கைதான தீவிரவாதிக்கு பெங்களூர் குண்டுவெடிப்பில் தொடர்பா?
தலைப்பிலேயே மீண்டும் "தீவிரவாதி" எனக்கூறும் பாசிச தினமணி, செய்தியின் உள்ளடக்கத்தில் கூறுவதைக் கவனியுங்கள்:
"மங்களூரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அப்துஸ்ஸமத் பத்கலுக்கு பெங்களூர் கிரிக்கெட் மைதான குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என விசாரிக்கப்படுவதாக கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தெரிவித்தார்.

ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜை புதன்கிழமை காலை சந்தித்துப் பேசிவிட்டு வெளியே வந்த ஆச்சார்யா, தீவிரவாதி குறித்து நிருபர்களிடம் கூறியது:"

தினமணியின் எழுத்துத் தீவிரவாதம், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் பத்திரிக்கை தர்மத்துக்கும் எதிராக அமைந்துள்ளதை இன்னும் பல உதாரணங்கள் மூலம் விளக்க முடியும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்று, தினமணியின் ஃபாஸிஸ முசுலிம் எதிர்ப்பு வெறியினைச் சுட்ட, ஒரேவிதமான குண்டுவெடிப்பு சம்பவங்களில் இருவேறு விதமாக வார்த்தைகளைக் கையாளும் மேற்கண்ட சில உதாரணம் மட்டுமே போதுமானது.

இந்துத்துவ பாசிசத்தின் கொலைவெறி சித்தாந்தங்கள்,நாட்டின் முதுகெலும்புகளில் ஒன்றாக ஊடகத்துறையிலும் ஊறிப் போய் விட்டதையே இவை காட்டுகின்றன.

சமூகம்,கல்வி,பொருளாதாரம்,அரசியல், அதிகாரங்களில் எம் தலித் சமூகம் முன்னேற வேண்டியது எந்த அளவுக்குக் கட்டாயமோ அதே அளவுக்கு முஸ்லிம் சமூகமும் முன்னேற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அதேவேளை,சிந்தப்படும் ஒவ்வொரு சொட்டு மையும் கூரிய வாள்களாக மக்கள் மனதில் தைத்து இறங்கி விடும் சக்தி வாய்ந்த இந்த ஊடகத்துறையில் முஸ்லிம்கள் கவனம் செலுத்துவதும் அதில் புரையோடிப் போயுள்ள, முஸ்லிம் எதிர்ப்பு வெறியையும் இந்துத்துவ பாசிச இரத்த வெறியையும் களையெடுக்க வேண்டியதும் அதை விட அதிக கவனம் செலுத்தி கவனிக்கப்பட வேண்டியதாகும். ஒருமுறை தோழர் அ.மார்க்ஸும் இதையே தான் முன்மொழிந்திருந்தார்.

நடுநிலை வேடமிட்டு,புனிதமான இந்தப் பத்திரிக்கை துறையையே கேவலப்படுத்தும் வகையில் செயல்படும் தினமணியின் பாசிச வெறி தோலுரிக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளில் முஸ்லிம் சமூகம் இறங்க வேண்டும்.

பத்திரிக்கைத் துறை கவுன்ஸிலுக்கும் இந்திய பிரதமர், ஜனாதிபதிக்கும் தினமணி போன்ற பத்திரிக்கை துஷ்பிரயோகத்தை எடுத்துச் சென்று அப்பத்திரிக்கைகளுக்கு பூட்டுபோட வேண்டிய பணியினையும் அதற்கு மாற்றாக ஊடகத்துறையில் கால்பதிக்கும் முயற்சியையும் முஸ்லிம் சமூகம் முன்னெடுக்கட்டுமாக.

மனித குலத்துக்கு எதிரான இந்துத்துவ பாசிசமும் அதற்கு துணை போகும் அனைத்து ஊதுகுழல்களும் தடை செய்யப்பட வேண்டும்.

இந்திய கட்டுக் கோப்புக்கும் ஒற்றுமைக்கும் எதிராக செயல்படும் எத்தகைய சக்தியையும் எதிர்த்து போராட இந்த தேசத்தில் நீதியை விரும்பும் அனைவரும் ஒன்றுபடுவோம். பார்ப்பனிய பாசிச பயங்கரவாதத்தை இம்மண்ணிலிருந்து விரட்டியடிப்போம்.

ஆக்கம்:இளைய வைகை

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தினமணியின் கோணல் கொண்ட பார்வை!!"

கருத்துரையிடுக