10 ஜூன், 2010

26/11 இரவன்று காமா மருத்துவமனையில் என்ன நடந்தது?

மும்பை 26/11 வழக்கில் கசாபிற்கு தூக்கு தண்டனை விதித்து சரியாக ஒரு மாதமாகும் நிலையில், அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கையாக, கசாபின் கருணை மனு தொடர்பாக முபீன் சோல்கர் மற்றும் ஃபர்ஹானா ஷா ஆகிய இரண்டு மூத்த வக்கீல்களை கசாபிற்காக வாதாடும்படி மும்பை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது.

கிரிமினல் வக்கீல் முபீன் சோல்கர் பல தீவிரவாத வழக்குகளை கையாண்டவர். தற்போது இவர்தான் அப்துஸ்ஸமத் பட்கலின் வழக்கையும் கையாள்கிறார்.

அதேபோல்,ஃபர்ஹானா ஷாவும் சஞ்சய் தத்தின் வழக்கு உட்பட பல வழக்குகளை வெற்றிகரமாக முடித்தவர்.

நியமணத்திற்க்குப் பின் இருவரும் இணைந்து 'மும்பை மிரர்'என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியை இங்கு தருகின்றோம்:

1.இந்த முக்கியமான வழக்கை எப்படி கையாள உள்ளீர்கள்?
கசாப் விவகாரத்தில் மீடியா என்ன தெரிவித்ததோ அது தான் எங்களுக்கு தெரியும். ஆகவே, முதல் கட்டமாக நாங்கள் இருவரும் கசாபுடன் உட்கார்ந்து உண்மையான செய்திகளை வெளிக்கொண்டு வருவோம். இவ்வழக்கின் பெருவாரியான போலீஸ் மற்றும் நீதிமன்ற ஆவணங்களை படித்து அதை பரிசீலிப்போம்.

2.நீதிமன்றத்தின் உங்கள் நியமனத்தை எவ்வாறு காண்கிறீர்கள்?
ஆச்சரியம் அளிக்கும் வகையில், நீதிபதி ஜே.என்.படேல் எங்களை குறிப்பாக இவ்வழக்கில் நியமித்தது பெருமையடையச் செய்கிறது. இந்த வழக்கு தேசிய மீடியா மட்டுமல்லாமல் உலகமே உற்று நோக்குகின்ற முக்கியமான வழக்காக இருக்கிறது. நீதிமன்றத்தின் எதிர்பார்ப்பு எங்களுக்கு புரிகிறது. அதை நிறைவேற்றுவதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் நாங்கள் எடுப்போம்.

3.கசாபிடம் ஸ்பெஷலாக கேட்பதற்கு உங்களிடம் ஏதாவது உள்ளதா?
ஆம், பல சதிகளும், சந்தேகங்களின் பின்னணியில் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ள காமா மருத்துவமனையில் கொல்லப்பட்ட ஹேமந்த் கர்கரே, அசோக் காம்தே உட்பட 4 மூத்த அதிகாரிகளின் கொலைக் குறித்து உண்மையாக நடந்தது என்ன? என்ற கேள்வியை கேட்க ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "26/11 இரவன்று காமா மருத்துவமனையில் என்ன நடந்தது?"

கருத்துரையிடுக