10 ஜூன், 2010

போபால் விஷவாயு:நீதிமன்ற தீர்ப்பு இரண்டாவது விபத்து- எஸ்.டி.பி.ஐ

புதுடெல்லி:1984ஆம் ஆண்டு போபாலில் விஷவாயு கசிவால் ஏற்பட்ட கூட்டுப் படுகொலையில் மாஜிஸ்ட்ரேட் அளித்த தீர்ப்பு இரண்டாவது விபத்து என எஸ்.டி.பி.ஐ கூறியுள்ளது.

நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் யூனியன் கார்பைடின் சி.இ.ஒ வாரன் ஆண்டர்ஸனை குற்றப்பத்திரிகையில் உட்படுத்தாதது மட்டுமல்ல கேசுப் மகேந்திரா உள்ளிட்ட குற்றவாளிகளை மரணத்தண்டனையிலிருந்து தப்பிக்க வைத்துள்ளது.

போபால் துயர சம்பவத்தில் நீதியை கேலிக்குரியதாக மாற்றியுள்ளது நீதிமன்ற தீர்ப்பு. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இந்திய தண்டனைச்சட்டத்தின் 304 பிரிவு குற்றவாளிகள் மீது தொடரப்பட்டதால் நீதிபதிக்கு முன்னால் வேறு வழி இல்லை.

நிறுவனத்தின் அப்பகுதி பாதுகாவலர்களும்,அரசியல்வாதிகளும், அதிகாரிகளெல்லாம் இக்குற்றத்தில் பங்காளிகளாவர்.தொடர்ந்து தொழிற்சாலைக்கு சோதனையிட செல்லும்பொழுது லஞ்சமாக பணம் வாங்கி பாதுகாப்பு சான்றிதழ்களை வழங்கிய மத்திய-மாநில அதிகாரிகளெல்லாம் இந்த விபத்துக்காரணகர்த்தாக்களாவர்.

மத்திய மாநில அரசுகள் ஒரு புறமும்,யூனியன் கார்பைடு நிறுவனம் மறுபுறமும் உருவாக்கிய ஒப்பந்தத்திற்கு சுப்ரீம் கோர்ட் அங்கீகாரம் வழங்கிய 1989 பிப்ரவரி 14-15 தேதிகளில் முதல் விபத்து நீதிபீடத்திற்கு ஏற்பட்டது.

போபால் விபத்தில் இந்தியா சரியான பாடத்தை படிக்கவேண்டும். அணுசக்தித் தொடர்பான விபத்தில் 500 கோடி நஷ்ட ஈடாக குறைக்கும் மசோதாவை மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு எஸ்.டி.பி.ஐ யின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "போபால் விஷவாயு:நீதிமன்ற தீர்ப்பு இரண்டாவது விபத்து- எஸ்.டி.பி.ஐ"

கருத்துரையிடுக