1 ஜூன், 2010

மதக்கலவரத்தை தூண்டும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் - குஜராத் அரசிற்கு கவர்னர் நோட்டிஸ்

காந்திநகர்:மதக்கலவரத்தை தூண்டும் விதத்தில் குஜராத் மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்ட நோட்டிஸ்கள், பாணர்கள் மற்றும் போஸ்டர்கள் விவகாரத்தில், உடனடியாக விசாரித்து அறிக்கை சமர்பிக்கும் படி குஜராத் கவர்னர் கமலா பணிவால் மோடி அரசிற்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரம், அஹமதாபாதில் நடந்த மதக்கலவரத்தில் ஒருவர் பலியானார் சுமார் 25 பேர் காயமடைந்தனர்.

இந்த கலவரத்திற்கு ஒட்டப்பட்ட போஸ்டர்களும் ஒரு காரணம் என்றும் அரசியல் நலன் கருதி பிஜேபி மற்றொரு மதக்கலவரத்தை உண்டாக்க முயற்சிப்பதாக கூறி, குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கவர்னரிடம் முறையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இவ்விவகாரத்தின் பின்னணியை கேட்டு கவர்னர் கமலா குஜராத் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

சர்ச்சைக்குரிய இந்த போஸ்டர்கள் முதலில் வதோதரா மாவட்டத்தில் காணப்பட்டது. இதற்கு பிறகு அதே தினத்தன்று தான் ஆளும் பிஜேபி அரசு சி.பி.ஐகெதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
source:TwoCircles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மதக்கலவரத்தை தூண்டும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் - குஜராத் அரசிற்கு கவர்னர் நோட்டிஸ்"

கருத்துரையிடுக