4 ஜூன், 2010

இரயில் கவிழ்ப்பு சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ யிடம் ஒப்படைப்பு

மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் கவிழ்ப்பு சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் மேதினிபூரில் கடந்த வாரம் நடந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ப்பு சம்பவத்தில் 148 பேர் இறந்தனர். இது தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் இதற்கு மேற்கு வங்க அரசு முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால் மத்திய அரசு வலியுறுத்தியதன் பேரில் சிபிஐ விசாரணைக்கு மேற்கு வங்க அரசு ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அரசு மூத்த அதிகாரி ஒருவர் டெல்லியில் புதன்கிழமை தெரிவித்தார்.

ரயில் கவிழ்ப்பு வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்துவதன் மூலம் உண்மை வெளிவரும். குற்றம் புரிந்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

முன்னதாக இச்சம்பவத்திற்கு மாவோயிஸ்டுகள் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர்கள் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இரயில் கவிழ்ப்பு சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ யிடம் ஒப்படைப்பு"

கருத்துரையிடுக