5 ஜூன், 2010

இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பு முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம்

புதுடெல்லி:காஸ்ஸாவிற்கு சென்ற நிவாரண உதவிக் கப்பல்கள் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய அராஜக தாக்குதலைக் கண்டித்து இந்திய முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பு கண்டனப் பேரணியை நடத்தின.

இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளை இந்திய முறித்துக்கொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த், மர்கஸ் ஜம்மியத்து அஹ்லே ஹதீஸ், ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸே முஸாவரா, ஆல் இந்தியா மில்லி கவுன்சில், முஸ்லிம் பொலிட்டிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா, இந்தியன் இஸ்லாஹி மூவ்மெண்ட், மஜ்லிஸே ஃபிக்ரே அமல்,ஸ்டண்ட்ஸ் இஸ்லாமிக் ஆர்கனைசேசன் உள்ளிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் கண்டனப் பேரணியில் கலந்துக் கொண்டனர்.

மாலை 3.30 மணியளவில் இந்தியா கேட்டிலிருந்து துவங்கிய பேரணியை ஷாஜஹான் ரோட்டில் போலீஸ் தடுத்து நிறுத்தியது. கோரிக்கைகள் அடங்கிய மனுவை பின்னர் பிரதமருக்கு அளித்தனர் போராட்டம் நடத்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவினர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பு முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம்"

கருத்துரையிடுக