5 ஜூன், 2010

மரணத்தண்டனையை எதிர்த்து கஸாப் அப்பீல்

மும்பை:மும்பைத் தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஜ்மல் கஸாப் சிறை அதிகாரிகள் மூலம் மும்பை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுத்தாக்கல் செய்தார்.

தனது வழக்கில் வாதாடுவதற்காக ஃப்ரீ லீகல் பேனலிலிருந்து வழக்கறிஞரை நியமிக்கவேண்டும் என்று கோரிய கஸாபின் கடிதத்தை லீகல் சர்வீஸ் கமிட்டிக்கு உயர்நீதிமன்றம் ஏற்கனவே அளித்திருந்தது.

கஸாபின் இந்த கோரிக்கை மனு உயர்நீதிமன்றத்தின் செயல் முதன்மை நீதிபதி ஜெ.என்.பாட்டீல் மற்றும் மூத்த நீதிபதி ஜி.ரணஜுன தேசாய் ஆகியோரின் மேற்பார்வையில் உள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மரணத்தண்டனையை எதிர்த்து கஸாப் அப்பீல்"

கருத்துரையிடுக