7 ஜூன், 2010

ஹெட்லி என்.ஐ.ஏவுடன் ஒத்துழைக்க மறுப்பதாக தகவல்

வாஷிங்டன்:மும்பைத் தாக்குதல் வழக்கில் சூத்திரதாரியாக கருதப்படும் அமெரிக்காவைச் சார்ந்த டேவிட் கோல்மன் ஹெட்லி தேசிய புலனாய்வு ஏஜன்சியின் கேள்விகளுக்கு பதில் கூறாமல் மெளனம் சாதிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்கா அரசியல் சட்டத்தின் 5-வது சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் ஹெட்லி பதில் அளிக்க மறுப்பதாக தகவல்."எனது வழக்கறிஞரின் உத்தரவுப்படி ஐந்தாவது சட்டத் திருத்தத்தை பயன்படுத்துவதற்கான அதிகாரத்தை மரியாதையுடன் நான் பயன்படுத்துகிறேன், ஆதலால் என்னிடம் அதிகமான கேள்விகளை கேட்காதீர்கள்." இதுதான் ஹெட்லி என்.ஐ.ஏவின் விசாரணை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ஹெட்லி அளித்த பதிலாகும்.

அமெரிக்க அரசியல் சட்டத்தின் ஐந்தாவது சட்டத்திருத்தத்தின் படி ஒரு அமெரிக்க பிரஜயை தனக்கு எதிராக சாட்சிக்கூற நிர்பந்திக்கக் கூடாது.

கடந்த மார்ச் மாதம் தீவிரவாதக் குற்றச்சாட்டுகளில் எஃப்.பி.ஐ முன்பு குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஹெட்லியை அமெரிக்கா மரணத்தண்டனையிலிருந்து விடுவித்தது.

அயல்நாடுகளில் சட்ட நடவடிக்கைகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற குற்றத்தை ஒப்புக்கொள்ளும் ஒப்பந்தத்தின் நிபந்தனைக்கு எதிரானது ஹெட்லியின் நிலைப்பாடு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹெட்லி என்.ஐ.ஏவுடன் ஒத்துழைக்க மறுப்பதாக தகவல்"

கருத்துரையிடுக