7 ஜூன், 2010

இஸ்ரேலிய பெண்களை திருமணம் செய்வோரின் குடியுரிமை ரத்துச் செய்யப்படும்- எகிப்து நீதிமன்றம்

கெய்ரோ:இஸ்ரேலிய பெண்களை திருமணம் செய்வோரின் எகிப்திய குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என்ற கீழ் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

இத்தகைய வழக்குகளை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தனித்தனியாக தீர்மானம் எடுக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இஸ்ரேலிய பெண்ணை திருமணம் செய்பவர்களுடன் அவர்களுடைய குழந்தைகளுக்கும் குடியுரிமையை ரத்துச் செய்யும் விவகாரத்தில் அமைச்சரவை முடிவெடுக்கலாம். குடியுரிமையை ரத்துச் செய்யும்பொழுது இஸ்ரேலிய பெண்மணி அரபு வம்சாவழியைச் சார்ந்தவரா அல்லது யூதரா என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

எகிப்து மற்றும் அரப் உலகத்துடன் பற்றில்லாத ஒரு தலைமுறை உருவாகக்கூடாது என நீதிமன்றத்திற்கு வந்த வழக்கறிஞர் நபீஹ் அல் வஹ்ஷ் தெரிவித்தார்.

30 ஆயிரம் எகிப்தியர்கள் இஸ்ரேலிய பெண்மணிகளை திருமணம் செய்துள்ளதாக அதிகாரப் பூர்வமற்ற புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

31 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தும் இஸ்ரேலும் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்தாலும் எகிப்தின் பெரும்பாலான மக்கள் இஸ்ரேலுடனான எந்தவொரு உறவையும் விரும்பாதவர்களாவர்.

சமீபத்தில் காஸ்ஸா நிவாரண கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய அராஜகத் தாக்குதலின் விளைவாக இஸ்ரேலுக்கெதிரான எகிப்தியர்களின் கோபம் அதிகரித்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இஸ்ரேலிய பெண்களை திருமணம் செய்வோரின் குடியுரிமை ரத்துச் செய்யப்படும்- எகிப்து நீதிமன்றம்"

கருத்துரையிடுக