7 ஜூன், 2010

காஸ்ஸா மீதான இஸ்ரேலின் தடையை உடைக்க உருதுகான் திட்டம்?

அங்காரா:இஸ்ரேல் காஸ்ஸாவின் மீது தொடரும் தடையை உடைக்க நேரடியாகவே பங்குபெறும் விஷயத்தில் துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் உருதுகான் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் காஸ்ஸா நிவாரணக் கப்பல்கள் மீது இஸ்ரேல் நடத்திய அராஜகத் தாக்குதலில் 8 துருக்கியர்கள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இஸ்ரேலின் தடையை மீறுவதற்கான விவகாரத்தை உருதுகான் பரிசீலித்து வருவதுக் குறித்து அவர் தனது நெருங்கிய அதிகாரிகளிடம் தெரிவித்ததை லெபனான் பத்திரிகையான அல் முஸ்தக்பல் வெளியிட்டுள்ளது.

காஸ்ஸாவிற்கு செல்லும் நிவாரணக் கப்பல்களுக்கு துருக்கி ராணுவம் பாதுகாப்பளிக்கும் என்ற தகவலை உருதுகான் அமெரிக்காவிடம் தெரிவித்ததாகவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

காஸ்ஸா கப்பல்கள் மீதான தாக்குதலைக் குறித்து விசாரணை மேற்கொள்ள துருக்கி கமிஷனை நியமித்துள்ளது.

குடியரசு துருக்கியின் 87 ஆண்டுகால வரலாற்றில் அந்நாட்டின் சிவிலியன்களுக்கெதிராக ஒரு அந்நிய நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்துவது இதுதான் முதல்தடவை என அமெரிக்காவிற்கான துருக்கி தூதர் நமிக் தான் தெரிவித்தார்.

இஸ்ரேல் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற துருக்கியின் கோரிக்கையை இஸ்ரேல் அங்கீகரிக்கவில்லை.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "காஸ்ஸா மீதான இஸ்ரேலின் தடையை உடைக்க உருதுகான் திட்டம்?"

கருத்துரையிடுக