கொச்சி:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் பி.டி.பி தலைவர் அப்துந்நாஸர் மஃதனியை 31-வது குற்றவாளியாக சேர்த்து கர்நாடக போலீஸ் குற்றப்பத்திரிகையை பெங்களூர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
கடந்த 2008 ஆம் ஆண்டு பெங்களூரில் 9 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் ஒரு பெண் உள்பட இரண்டு பேர் கொல்லப்பட்டிருந்தனர்.இவ்வழக்கில் கர்நாடகா தீவிரவாத எதிர்ப்பு படைத்தலைவர் சங்கர் பித்ரி கடந்த சனிக்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.
இவருடையை தலைமையிலான போலீஸ் குழு கடந்த வெள்ளிக்கிழமை ரகசியமாக கொச்சிக்கு சென்று அப்துந்நாஸர் மஃதனி மற்றும் அவருடைய மனைவி சூஃபியாவிடமும் விசாரணையை மேற்கொண்டது.
சூஃபியாவிடம் நடத்திய விசாரணை திருப்திகரமாக இருந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணைக்கு ஆஜராக சூஃபியாவுக்கு ஒரு மாதம் முன்பே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
பெங்களூருக்கு செல்ல முடியாது என சூஃபியா பதில் அனுப்பியதைத் தொடர்ந்துதான் கடந்த வெள்ளிக்கிழமை போலீஸ் அவருடைய வீட்டிற்கு சென்று விசாரணையை மேற்கொண்டது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு: அப்துந்நாஸர் மஃதனி 31-வது குற்றவாளியாக சேர்ப்பு"
கருத்துரையிடுக