8 ஜூன், 2010

'பெ௦௦௦௦௦௦௦௦௦௦௦ங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்த்ததை என்னிடம் தெரிவிக்கவில்லை'- அப்துந்நாஸர் மஃதனி

திருவனந்தபுரம்:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தன்னை குற்றவாளியாகவோ அல்லது சாட்சியாகவோ உட்படுத்தியதை தன்னிடம் தெரிவிக்கவில்லை என பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துந்நாஸர் மஃதனி தெரிவித்துள்ளார்.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக கர்நாடகாவிலிருந்து வந்த போலீஸ் குழுவினர் தன்னையும்,தனது மனைவி சூஃபியாவையும் விசாரித்தனர் என அவர் தெரிவித்தார்.

உடல் நலம் சரியில்லாத காரணத்தால் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மஃதனி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

"பெங்களூர் குண்டுவெடிப்பில் எனக்கு எவ்வித தொடர்பும் இல்லை. நேற்று முன்தினம் பெங்களூர் போலீஸின் மூன்று அதிகாரிகள் எங்களிடம் விசாரித்தனர். 15 நிமிடம்தான் விசாரணை நடந்தது. பத்திரிகைகள் குறிப்பிடுவதுபோல் ஒரு நாள் முழுவதும் விசாரணை தொடரவில்லை.

தடியண்டவிட நஸீர் தொடர்பாக என்னிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. எனது மனைவியிடம் சில போன் நம்பர்களை தெரியுமா? என்று வினவினர். ஆல்பத்தில் சில ஃபோட்டோக்களை காண்பித்து சிலரை அறிமுகம் உண்டா என்று கேட்டனர். சிலர் எனது மனைவிக்கு தெரிந்தவர்கள்.

பி.டி.பியின் சில தலைவர்களைக் குறித்து என்னிடம் கேட்டனர். எனக்கு தெரிந்த விபரங்களையெல்லாம் அவர்களிடம் கூறிவிட்டேன். பெங்களூர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக கூறி கைது செய்யப்பட்டுள்ள எவரைக் குறித்தும் என்னிடம் கேட்கவில்லை.

தடியண்டவிட நஸீர் நான் சிறையிலிருந்து விடுதலையான பிறகு என்னை சந்தித்தார். பெங்களூர் குண்டுவெடிப்பிற்கு முன்போ அல்லது பின்னரோ அவருடன் நான் எவ்வித தொடர்பையும் வைத்துக் கொள்ளவில்லை.

தீவிரவாதம் தொடர்பாக நடைபெறும் விசாரணைகளிலெல்லாம் எனது பெயரை இழுப்பது ரகசியத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மாவட்டத்தை விட்டுச் செல்லக்கூடாது என சூஃபியாவுக்கு ஜாமீனில் நீதிமன்ற உத்தரவு உள்ளதாலும்,எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் பெங்களூருக்கு விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை" இவ்வாறு அப்துந்நாஸர் மஃதனி தெரிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'பெ௦௦௦௦௦௦௦௦௦௦௦ங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்த்ததை என்னிடம் தெரிவிக்கவில்லை'- அப்துந்நாஸர் மஃதனி"

கருத்துரையிடுக