8 ஜூன், 2010

நான்கு ஃபலஸ்தீனர்களை இஸ்ரேல் சுட்டுக்கொன்றது

காஸ்ஸா:காஸ்ஸா கடற்பகுதியில் நான்கு ஃபலஸ்தீனர்களை இஸ்ரேல் கடல் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இஸ்ரேலில் தாக்குதல் நடத்துவதற்காக படகில் வரும் பொழுது சுட்டுக்கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

நான்கு உடல்களை கண்டறிந்ததாகவும், இரண்டு பேரை காணவில்லை எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. தடையை மீறி காஸ்ஸாவிற்கு அத்தியாவசியப் பொருட்களுடன் வந்த நிவாரணக் கப்பலின் மீது அராஜக தாக்குதலை நடத்திய இஸ்ரேலின் அடுத்தக்கட்ட கொடூரம்தான் இது.

இதுத் தொடர்பாக இஸ்ரேல் மேலும் எந்த விபரத்தையும் தெரிவிக்கவில்லை. தாக்குதலை நடத்த ஹெலிகாப்டர்களையும் ராணுவம் பயன்படுத்தியதாக பத்திரிகைகள் கூறுகின்றன.

தங்களின் நான்கு உறுப்பினர்களை இஸ்ரேல் கொலைச் செய்ததாகவும், ஐந்துபேரை காணவில்லை எனவும் ஃபத்ஹ் கட்சியின் போராளி பிரிவான அல் அக்ஸா பிரிகேட்ஸ் இஸ்ரேல் பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளது.

காஸ்ஸாவிலிலுள்ள மீன் பிடி படகுகளை தாக்குவது இஸ்ரேல் ராணுவத்தின் வழக்கமாகும் என பத்திரிகைகள் கூறுகின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "நான்கு ஃபலஸ்தீனர்களை இஸ்ரேல் சுட்டுக்கொன்றது"

கருத்துரையிடுக