4 ஜூன், 2010

அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு:மேலும் ஒரு ஹிந்துவ பயங்கரவாதி கைது

ஜெய்பூர்:கடந்த 2007ல் நடைபெற்ற அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில், ராஜஸ்தான் ஏ.டி.எஸ் மேலும் ஒரு ஹிந்துத்வ பயங்கரவாதியை கைது செய்துள்ளது.

சந்திரசேகர் பரோட் என்ற அந்த பயங்கரவாதியை மத்தியபிரதேச மாநிலத்தில் ஷாஜாபூர் என்ற இடத்தில் ஏ.டி.எஸ் கைது செய்தது.

இவனுக்கும் அபினவ்பாரத் எனப்படும் ஹிந்துத்துவ தீவிரவாத கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளதாகவும், சந்திரசேகர் தற்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் முக்கிய பதவியில் இருப்பதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும்,மத்திய பிரதேசத்தில் நடந்துள்ள பல்வேறு சம்பவங்களுடன் சந்திரசேகருக்கு தொடர்பு இருப்பதாக ஏ.டி.எஸ்யை மேற்கோள் காட்டிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரவீன் குமார் மாத்தூர் என்ற போலீஸ் அதிகாரியால் கைது செயப்பட்ட இவன், நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் 12 நாள் காவலில் ஜெய்பூர் கொண்டுவரப்பட்டுள்ளான்.

இது குறித்து கூடுதல் டைரக்டர் கபில் கார்க் கூறுகையில், சந்தரசேகர் மிகவும் பனக்கார குடும்பத்தை சேர்ந்தவரென்றும், பலசாயி கிராமத்தில் தன் மகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும்போது, ஏ.டி.எஸ்ஸால் கைது செயப்பட்டார் என்றும் தெரிவித்தார்.

இவ்வழக்கில் முன்பு கைது செய்யப்பட்ட தேவேந்திர குப்தாவின் மைத்துனர் அமனை ஏ.டி.எஸ் கைத செய்து பின்னர் ஆதாரமில்லாமல் விடுவித்தது.

இந்தியாவில் எங்கு குண்டுவெடித்தாலும், புதிய புதிய இயக்கத்தின் பெயர்களில் முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு வந்த நிலையில்,உண்மையின் இவ்வெளிப்பாடு – முஸ்லீம் சமுதாயம் பட்ட அவமானத்தைப் போக்கிவிடுமா? இல்லை முஸ்லீம்கள் மேல் பதிக்கப்பட்ட தீவிரவாதக் கரைத்தான் நீக்கப்படுமா? பல ஆண்டு சிறையில் வாடியதற்கு பிறகு, நீதிமன்றங்களினால் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டும், சமுதாயத்தில் அவர்கள் படும் பாடு, அதுதான் அமைதிக்கு ஜனநாயகத்தின் பரிசு என்றால் அது மிகையாகாது.
source:Siasat

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு:மேலும் ஒரு ஹிந்துவ பயங்கரவாதி கைது"

கருத்துரையிடுக